போராட்டங்களின் வருடம்
அவசர ஆலோசனைக் கூட்டம்
02
Jan
ஜனவரி 2 - தமிழ்கடல் அய்யா திரு.நெல்லை கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்து விவாதிக்க தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.
இராஜபாளையம்
03
Jan
ஜனவரி 3 - இராஜபாளையம் வட்டார அனைத்து ஜமாஅத்,மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC-ஐ கண்டித்து விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் (03-01-2020) மாலை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
தேனி ,கம்பம்
07
Jan
ஜனவரி 7 - அநீதிக்கு எதிரான இயக்கம் சார்பில் (07-01-2020) மாலை தேனி மாவட்டம், கம்பம் நகரில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டம் அறிதலரங்கம் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார்.
கடலூர்
10
Jan
ஜனவரி 10 - குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கடலூர் ஒருங்கிணைந்த ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் கடலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
சென்னை
11
Jan
ஜனவரி 11 - சென்னை அம்பத்தூரில் இயங்கிவரும் தாய்தமிழ் மழலையர் பள்ளியில் இன்று நடைபெற்ற தமிழ் புத்தாண்டு,பொங்கல் திருநாள் விழா மற்றும் குழந்தைகளின் கலைவிழா நிகழ்வில் பங்கேற்றார்.
நெல்லை
12
Jan
ஜனவரி 12 - நெல்லை மாநகர் மற்றும் புறநகர் அனைத்து ஜமாத் மற்றும் உலமாக்கள் ஒருங்கிணைப்பில் நேற்று (12-01-2020) மாலை குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
நெல்லை
18
Jan
ஜனவரி 18 - குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நேற்று(18-01- 2020) சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
வேலூர்
19
Jan
ஜனவரி 19 - மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நேற்று (19-01-2020) மாலை வேலூரில் நடைபெற்ற CAA NRC NPR எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
அருப்புக்கோட்டை
21
Jan
ஜனவரி 21 - முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் திரு.ரவிச்சந்திரன். அவர்கள் தற்போது 15 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார், அவரை அருப்புக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
மதுரை
22
Jan
ஜனவரி 22 - CAA,NRC,NPR, ஆகிய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் (22-01-2020) மதுரையில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
தஞ்சை
23
Jan
ஜனவரி 23 - தஞ்சை மாவட்டம் மல்லிபட்டிணத்தில் அனைத்து ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் (23-01-2020) நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
திருவாரூர்
24
Feb
ஜனவரி 24 - திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அனைத்து ஜமா அத் கூட்டமைப்பு மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று நடைபெற்ற CAA,NRC,NPR எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
பத்திரிக்கை
25
Jan
ஜனவரி 25 - தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தாவிட்டால் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம். ஹைட்ரோகார்பன், குடியுரிமை சட்ட பிரச்னையை திசை திருப்பவே ரஜினி பெரியார் பற்றி பேசுகிறார்.- தினத்தந்தி, தினமணி, தினகரன் ஆகிய நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள்.
திருப்பூர்
26
Jan
ஜனவரி 26 - ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் இன்று திருப்பூரில் நடைபெற்ற இந்திய தேசம் காத்த இஸ்லாமியர்களின் நினைவு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
தூத்துக்குடி
29
Jan
ஜனவரி 29 - குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக (29-01-2020) தூத்துக்குடியில் நடைபெற்ற CAA,NRC,NPR ஐ திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கண்டன உரையாற்றினார்.
தூத்துக்குடி
31
Jan
ஜனவரி 31 - அனைத்து ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து (31-01-2020) பண்ருட்டியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
கடலூர்
02
Feb
பிப்ரவரி 2 - இனரீதியாக, மதரீதியாக, இந்தியாவை பிளவுபடுத்தும் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கடலூர் மாவட்டம், எள்ளேரியில் இஸ்லாமிய இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
கடலூர்
06
Feb
பிப்ரவரி 6 - கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கருஞ்சட்டை பேரணியில் பங்கேற்று உரையாற்றினார்.
வேலூர்
07
Feb
பிப்ரவரி 7 - இந்திய தவ்ஹீத் ஜமா அத் சார்பில் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
தர்மபுரி
08
Feb
பிப்ரவரி 8 - தர்மபுரியில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார்.
உடுமலை
09
Feb
பிப்ரவரி 9 - உடுமலை,மடத்துக்குளம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை,அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் (09-02-2020) மாலை உடுமலைப்பேட்டையில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
புதுக்கோட்டை
10
Feb
பிப்ரவரி 10 - CAA,NRC,NPR, போன்ற மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை கைவிடக்கோரி நேற்று(10-02-2020) புதுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
சிதம்பரம்
12
Feb
பிப்ரவரி 12 - சிதம்பரம் மற்றும் புவனகிரி வட்டார அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து புவனகியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
திருச்சி
14
Feb
பிப்ரவரி 14 - திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் நேற்று (14-02-2020) திருச்சியில், உழவர் சந்தை அருகே அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்திட வலியுறுத்தி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
வண்ணாரப்பேட்டை
15
Feb
பிப்ரவரி 15 - சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று காவல்துறையிரால் நடத்தப்பட்ட தடியடி சம்பவத்தை கண்டித்து திருவாரூர் மாவட்டம்,கூத்தாநல்லூரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
கும்பகோணம், சோழபுரம்
16
Feb
பிப்ரவரி 16 - குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
சேப்பாக்கம்
17
Feb
பிப்ரவரி 17 - ஃபாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் சேப்பாக்கம், நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் தலைவர் பங்கேற்றார்.
சென்னை ,பழைய வண்ணாரப்பேட்டை
18
Feb
பிப்ரவரி 18 - சென்னை,பழைய வண்ணாரப் பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐந்தாவது நாளாக இஸ்லாமிய சகோதரிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
குடியுரிமை திருத்த சட்டம்
19
Feb
பிப்ரவரி 19 - குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
விழுப்புரம்
20
Feb
பிப்ரவரி 20 - விழுப்புரத்தில் தமுமுக சார்பில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு கருத்தரங்கத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
பெரியார் திடலில்
22
Feb
பிப்ரவரி 22 - (22-02-2020) பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடம் 2.0 நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார்.
நாகூர்
23
Feb
பிப்ரவரி 23 - CAA,NCR, NPR, சட்டங்களை எதிர்த்து நாகூர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாலை நாகூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
சீர்காழி
29
Feb
பிப்ரவரி 29 - குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சீர்காழியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.
திருச்சி
01
March
மார்ச் 1 - CAA-NRC-NPR, குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி வரகநேரி இளைஞர்கள் பொது நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
வள்ளுவர் கோட்டத்தில்
03
March
மார்ச் 3 - டெல்லியில் அப்பாவி இஸ்லாமிய மக்கள் மீது ஏவிவிடப்பட்ட வன்முறை வெறியாட்டம், 40 க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் திரு ஜவாஹிருல்லா.அவர்கள். SDPI கட்சியின் தேசிய துணை தலைவர் திரு.தெகலான் பாகவி.அவர்கள். கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் திரு.இனிகோ இருதயராஜ். அவர்கள். ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
திருவண்ணாமலை
05
March
மார்ச் 5 - CAA,NRC,NPR குடியுரிமை சட்டங்களை எதிர்த்து (05-03-2020) திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
தென்காசி
06
March
மார்ச் 6 - தென்காசி மாவட்டம், புளியங்குடியில் இந்திய மக்களின் குடியுரிமையை பறிக்கும் CAA,NRC,NPR போன்ற பாசிச பயங்கரவாத சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற தேசம் காப்போம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினேன்.
சென்னை, மயிலாப்பூர்
12
March
மார்ச் 12 - சென்னை மயிலாப்பூரில் 7வது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் மாலை பங்கேற்று உரையாற்றினார்மார்ச் 12 - சென்னை மயிலாப்பூரில் 7வது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் மாலை பங்கேற்று உரையாற்றினார்.
தூத்துக்குடி
13
March
மார்ச் 13 - தூத்துக்குடி மாநகர ஜமாத்துல் உலமாக்கள் சார்பில் நேற்று (13-03-2020) தூத்துக்குடியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
கடலூர்
15
March
மார்ச் 15 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் (15-03-2020) நடைபெற்றது.
திருச்சி, லால்குடி
19
March
மார்ச் 19 - லால்குடி வட்டார ஜமாத்துல் உலமா சபை, அனைத்து இயக்கங்கள், கட்சிகள், மற்றும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை இணைந்து CAA,NRC,NPR குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நேற்று (19-03-2020) திருச்சி லால்குடியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கண்டண உரையாற்றினார்.
தலைவர் தனது வீட்டின்முன்
07
May
மே 7 - காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்தை பறித்து அதனை மத்திய நீர்வளத்துறையுடன் இணைக்கும் இந்திய அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தமிழகம் முழுவதும் மாலை அவரவர் வீட்டின் முன்பாக நின்று காவிரி உரிமைக்காக முழக்கமிடும் போராட்டம் நடைபெற்றது,போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்,அப்போராட்டத்தின் ஒரு பகுதியாக தலைவர் தனது வீட்டின் முன்பாக நின்று போராட்டத்தில் பங்கேற்று காவிரி உரிமைக்காக குரல் எழுப்பினார்.
பத்திரிக்கை
13
May
மே 13 - மோடி அரசின் மின்சார சட்டத் திருத்தம் ! மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசு ! - நக்கீரன் வார இதழ் செய்திகளின் தொகுப்பு.
நெய்வேலி
18
May
மே 18 - தமிழீழத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது வீரச்சாவடைந்த போராளிகளுக்கும்,பொதுமக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு மாலை 6 மணியளவில் தமிழகம் முழுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் சார்பில் முன்னெடுக்கப்பட்டது, அதன் ஒரு பகுதியாக நெய்வேலியில் தலைவர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் நினைவேந்தல் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தினார்.
நெய்வேலி
05
July
ஜூலை 5 - வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கவும் அயல்நாடுகளில் அல்லல்படும் தமிழர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கக்கோரியும், வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன் காக்க தனி நலவாரியமும், தனி அமைச்சகமும் உடனே அமைத்திட வேண்டியும். தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமை கட்சியால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக நெய்வேலியில் உள்ள எனது இல்லத்தில் பதாகையேந்தி தலைவர் தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சேலம்
30
July
ஜூலை 30 - சேலம் மேற்கு மாவட்டம், மேட்டூர் தொகுதியை உள்ளடக்கிய மேச்சேரி நகரம், மற்றும் ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்த 150 க்கும் மேற்ப்பட்டோர் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கையை ஏற்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கவும் அயல்நாடுகளில் அல்லல்படும் தமிழர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கக்கோரியும், வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன் காக்க தனி நலவாரியமும், தனி அமைச்சகமும் உடனே அமைத்திட வேண்டியும். தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமை கட்சியால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக நெய்வேலியில் உள்ள எனது இல்லத்தில் பதாகையேந்தி தலைவர் தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பண்ருட்டி
04
Aug
ஆகஸ்ட் 4 - பண்ருட்டி நகர வன்னியர் சங்க தலைவர் திரு. சாந்தகுமார் அவர்களின் தலைமையில் பண்ருட்டி நகர பகுதியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்களின் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். தமிழக வாழ்வுரிமைக்கான பயணத்தில் எம்மோடு இணைந்த அவர்கள் அனைவரையும் வருக! வருக!! என வரவேற்கிறோம்.
இணையவழி
07
Aug
ஆகஸ்ட் 7 - ஒபிசி மக்களை உயர்த்திட பாடுபட்ட இட ஒதுக்கீடு நாயகன் மண்டல் தினத்தை போற்றுவோம் என்ற தலைப்பில் அகில இந்திய ஒபிசி ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரையில் நடைபெற்ற இணையவழியிலான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று திரு.பி.பி.மண்டல். அவர்கள் குறித்தும், திரு.வி.பி.சிங் அவர்கள் குறித்தும், மண்டல் கமிஷன் குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
சென்னை
16
Aug
ஆகஸ்ட் 16 - தமிழகத்தின் அரசு மற்றும் தனியார் துறையின் வேலைவாய்ப்புகளில் வட இந்தியரின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழகத்தின் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை இயற்ற வலியுறுத்தியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் நிர்வாகிகள் அவரவர்கள் இல்லத்தின் முன்பாக கோரிக்கை முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்,அதன் ஒரு பகுதியாக நான் சென்னையில் உள்ள எனது இல்லத்தின் முன்பாக சமூக இடைவெளியுடன் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார்.
கடலூர்
25
Aug
ஆகஸ்ட் 25 - கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகரத்தைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி எனது தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். தமிழக வாழ்வுரிமை மீட்ப்புக்கானபயணத்தில் எங்களோடு இணைந்த அவர்கள் அனைவரையும் வருக! வருக!! என வரவேற்கிறோம்.
கடலூர்
26
Aug
ஆகஸ்ட் 26 - கடலூர் மாவட்டம், நெய்வேலி நகரத்தைச் சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி எனது தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். தமிழக வாழ்வுரிமை மீட்ப்புக்கானபயணத்தில் எங்களோடு இணைந்த அவர்கள் அனைவரையும் வருக! வருக!! என வரவேற்கிறோம்.
கள்ளக்குறிச்சி
30
Aug
ஆகஸ்ட் 30 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்ப்பட்டோர் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்களின் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். தமிழக வாழ்வுரிமைக்கான பயணத்தில் எங்களோடு இணைந்த அவர்கள் அனைவரையும் வருக! வருக!! என வரவேற்கிறோம்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி

உரிமை மீட்சியே! இனத்தின் எழுச்சி!!

உறுப்பினராக