போராட்டங்களின் வருடம்
நெய்வேலி
06
Jan
ஜனவரி 6 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் 06-01-2019 அன்று நெய்வேலியில் நடைபெற்றது.
சென்னை
11
Jan
ஜனவரி 11 - (11.01.2019) சென்னை புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் ஏழு நூல்கள் மற்றும் தோழர் பொழிலன் அவர்களின் ஒரு நூல் ஆகியவற்றின் வெளியீட்டு விழாவில் பங்கேற்று நூல்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்டார்.
பத்திரிக்கை
21
Jan
ஜனவரி 21 - என்எ.சிக்கு எதிராக பொங்கும் வேல்முருகன் - அதிரடி குரல் - அதிரடி குரல் - தமிழ்மாத இதழில் வெளிவந்துள்ள செய்திகள்
தூத்துக்குடி
22
Jan
ஜனவரி 22 - தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி தலைவரின் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தேனி, கம்பம்
28
Jan
ஜனவரி 28 - போராளி திரு, பழனிபாபா. அவர்களின் நினைவு நாளான இன்று இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் தேனி மாவட்டம், கம்பம் நகரத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
சென்னை
03
Feb
பிப்ரவரி 3 - "தன்னாட்சி தமிழகம்" சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு இன்று சென்னையில் நடைபெற்ற "தன்னாட்சி மாநாட்டில்" தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பங்கேற்று உரையாற்றினேன்.
ஈரோடு
04
Feb
பிப்ரவரி 4 - ஈரோட்டில் இன்று நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் 11 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
சேலம்
05
Feb
பிப்ரவரி 5 - தமிழகத்தில் அரசு, மற்றும் தனியார் துறையின் வேலை வாய்ப்புகள் அனைத்திலும் தமிழர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய மண்ணின் மைந்தர்களுக்கு "வேலை வாய்ப்பு உறுதிச் சட்டம்" இயற்ற வலியுறுத்தி பிப்ரவரி 28 ந் தேதி, சென்னையில் நடைபெற உள்ள பேரணி குறித்தும் அதில் சேலம் கிழக்கு மாவட்டம், மற்றும் சேலம் தெற்கு மாவட்டம், சார்பில் திரளாக கலந்து கொள்வது குறித்தும் தலைவர் தலைமையில் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது.
பத்திரிக்கை
08
Feb
பிப்ரவரி 8 - தமிழகத்தில் அரசு, மற்றும் தனியார் துறையின் வேலை வாய்ப்புகள் அனைத்திலும் தமிழர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய மண்ணின் மைந்தர்களுக்கு "வேலை வாய்ப்பு உறுதிச் சட்டம்" இயற்ற வலியுறுத்தி வருகின்ற பிப்ரவரி 28 ந் தேதி, சென்னையில் மாபெரும் கோரிக்கை பேரணி. தினத்தந்தி.தினமணி.தினகரன். காலை கதிர்.தமிழ் ஹிந்து.ஆகிய நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள்
அரியலூர்
21
Feb
பிப்ரவரி 21 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இன்று அரியலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்தொழிக்கும் சிமெண்ட் ஆலைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பத்திரிக்கை
23
Feb
பிப்ரவரி 23 - தமிழகத்தின் அரசு மற்றும் தனியார் துறைகளின் வேலை வாய்ப்புகளில் 90% தமிழர்களுக்கே சிறப்பு சட்டம் இயற்றக் கோரி கோட்டை நோக்கி மாபெரும் கோரிக்கை பேரணி நாள் - 28 - 2 - 2019, நேரம் - மாலை 3 மணி, பேரணி துவங்கும் இடம்- ராஜரத்தினம் மைதானம். நன்றி - தினத்தந்தி.தினமணி. தினகரன். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள்.
சென்னை
25
Feb
பிப்ரவரி 25 - காணாமல் போன சூழலியல் போராளி தோழர் முகிலன் அவர்களை கண்டுபிடிப்பதற்க்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தக்கோரி அரசை வலியுறுத்தும் வகையில் இன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில், நடைபெற்ற தோழர் முகிலன் எங்கே ஆலோசனை கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பங்கேற்று எனது கருத்துக்களை முன்வைத்தேன், முடிவில் பங்கேற்ற அனைத்து கட்சிகள், மற்றும் இயக்கங்கள் ஒருங்கிணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 2ம் தேதியன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சென்னை
28
Feb
பிப்ரவரி 28 - வடநாட்டவர்களின் வேட்டைக்காடாகும் தமிழகம், பறிபோகும் தமிழர்களின் வேலை வாய்ப்புகள், மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இன்று சென்னையில் மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெற்றது. இப்பேரணியை தமிழர் தேசிய முன்னணி தலைவர் ஐயா பழ, நெடுமாறன். அவர்கள் துவக்கி வைத்தார், மேலும் தமிழ் தேசிய பேரியக்கம் தலைவர் ஐயா,மணியரசன். அவர்கள் மற்றும் தமிழர் கொற்றம் அமைப்பின் தலைவர் திரு,வியனரசு. அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
பத்திரிக்கை
01
March
மார்ச் 1 - வடநாட்டவர்களின் வேட்டைக்காடாகும் தமிழகம், பறிபோகும் தமிழர்களின் வேலை வாய்ப்புகள், மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய "வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம்" இயற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நேற்று சென்னையில் மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெற்றது. தினத்தந்தி. தமிழ் ஹிந்து.தினமணி.டைம்ஸ் ஆப் இந்தியா.ஆகிய நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள்.
சென்னை
02
March
மார்ச் 2 - காணாமல் போன சூழலியல் போராளி தோழர் முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி சென்னை சேப்பாக்கத்தில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு அய்யா நல்லக்கண்ணு அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட்த்தில் பங்கேற்று கண்டண உரையாற்றினேன்.
தென்னக தொடர்வண்டி துறை
06
March
மார்ச் 6 - தென்னக தொடர்வண்டி துறையில் தொடர்ச்சியாக சட்டத்துக்கு புறம்பான முறையில் தமிழர்களை புறக்கணித்து முறைகேடான வழிகளில் வடநாட்டவர்களை பணியிலமர்த்தும் போக்கு தொடர்வதைக் கண்டித்தும், இந்த மாதம் 4ம் தேதி வெளியான தேர்வு முடிவுகளில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து இத்துறையில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது குறித்தும்,நிலவும் முறைகேடுகள் குறித்தும் உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுத்திட உத்தரவிட வேண்டுமென்றும் வலியுறுத்தி தென்னக தொடர்வண்டி துறை பொது மேலாளர் அவர்களை சந்தித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மனு அளித்தோம்.
சென்னை
09
March
மார்ச் 9 - ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம்.
மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம்
10
March
மார்ச் 10 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் (10.03.2019)நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாடாளுமன்றத் தேர்தல்-2019இல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கும் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம்.
சென்னை
22
March
மார்ச் 22 - தொடர்வண்டி பணியாளர் தேர்வுக் குழுவின் (RRB) தேர்வு மற்றும் பணி நியமனங்களில் தொடரும் தமிழர் விரோத போக்கை கண்டித்து முதல் கட்டமாக சென்னை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தொடர்வண்டி பணியாளர் தேர்வுக் குழுவின் (RRB) உடல்தகுதி தேர்வு நடைபெறும் ஆவடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை
02
Apr
ஏப்ரல் 2 - மறைந்த இயக்குனர் திரு.மகேந்திரன். அவர்களின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் இயக்குநர் திரு.மகேந்திரன். அவர்களின் இழப்பு தமிழினத்திற்கே பேரிழப்பு. அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! அவரது இழப்பால் துயருறும் அவர் மகன் ஜான் மகேந்திரன்,குடும்பத்தினர், மற்றும் அவரது உற்றார் உறவினர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
கோவை
03
Apr
ஏப்ரல் 3 - கோவை துடியலூரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரிதன்யாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி,தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஒரு லட்சம் ரூபாயை உதவித்தொகையாக வழங்கினேன்.
கடலூர்
05
Apr
ஏப்ரல் 5 - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு.TRV.ரமேஷ். அவர்களை ஆதரித்து, இன்று கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
கடலூர்
06
Apr
ஏப்ரல் 6 - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு.TRV.ரமேஷ். அவர்களை ஆதரித்து, நேற்று கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
விழுப்புரம்
07
Apr
ஏப்ரல் 7 - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியின் விடுதலைச் சிறுத்கைகள் கட்சியின் வேட்பாளர், திரு.துரை.ரவிக்குமார். அவர்களை ஆதரித்து, நேற்று(07 - 04- 2019) உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
கள்ளக்குறிச்சி
08
Apr
ஏப்ரல் 8 - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்,மருத்துவர்,திரு.பொன்.கவுதம சிகாமணி.அவர்களை ஆதரித்து, இன்று(08 - 04- 2019) சின்ன சேலத்தில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
சென்னை
11
Apr
ஏப்ரல் 11 - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருப்பெரும்பதூர் நாடாளுமன்ற தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்,திரு,டி ஆர், பாலு.அவர்களை ஆதரித்து, நேற்று(11 - 04- 2019) சென்னை கொரட்டூரில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
திருவள்ளூர்
12
Apr
ஏப்ரல் 12 - சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள பூந்தமல்லி தனித் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு. கிருஷ்ணசாமி. அவர்களை ஆதரித்து நேற்று (12-04-2019) திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் கூட்டுரோட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
சைதாப்பேட்டை
13
Apr
ஏப்ரல் 13 - தென்சென்னை நாடாளுமன்ற தெகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திருமதி,தமிழச்சி தங்கபாண்டியன். அவர்களை ஆதரித்து சைதாப்பேட்டையில் நேற்று(13-04-2019) நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
சென்னை
11
May
மே 11 - சென்னையில் நியூஸ் 7 தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற நலம் விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்று மதுரை தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனைக்கான சமூக ஆரோக்கியத்திற்கான (community healthcare) விருதை மருத்துவமனையின் இயக்குநர் அவர்களிடம் வழங்கினார்.
நெய்வேலி
18
May
மே 18 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நெய்வேலி அலுவலகத்தில், இன்று(18-05-2019) மாலை நடைபெற்றது.
சென்னை
21
May
மே 21 - தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு தமிழருக்கே! தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பை தமிழர்களிடமிருந்து தட்டிப்பறித்து வட இந்தியர்களை தமிழகத்தில் அனுமதிக்கும் தமிழர் விரோத இந்திய அரசு மற்றும் அதற்குத் துணை நிற்கும் தமிழக அரசைக் கண்டித்து இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின்(LIC) பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச்சங்கம் மற்றும் எஸ் சி எஸ் டி,ஊழியர் நலச்சங்கம் சார்பில் இன்று பகல் 1மணி அளவில் LIC கட்டிடம் எதிரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
கள்ளக்குறிச்சி
30
May
மே 30 - நடைபெற்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில், கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் திரு,பொன்.கவுதம சிகாமணி. அவர்கள் இன்று மாலை எனது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
சிதம்பரம்
30
May
மே 30 - நடைபெற்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு,தொல்.திருமாவளவன். அவர்கள் இன்று எனது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
கடலூர்
23
Jun
ஜூன் 23 - நிலம்,நீர்,காற்று,கடல் வளங்களை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட தமிழ் மக்களை அழிக்கும் பேரழிப்புத் திட்டங்களைக் கைவிடக் கோரி மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை இன்று கிழக்குக் கடற்கரை சாலையில் நடைபெற்ற மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டத்தின் ஒரு பகுதியாக கடலூரில் நடைபெற்ற போராட்டம்.
நாகை
21
Jun
ஜூன் 21 - நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணைப்பு விழாவில் ஏராளமானோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி எனது தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். இடம் - நாகை.
சென்னை
21
Jun
ஜூன் 21 - சென்னை காமராஜர் அரங்கத்தில் SDPI கட்சி சார்பில் நடைபெற்ற 11ஆம் ஆண்டு துவக்க விழா, பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி, மற்றும் விருதுகள் வழங்கும் விழா,ஆகிய முப்பெரும் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
பத்திரிக்கை
09
Jun
ஜூன் 9 - ராமதாஸ் பேராசையே, பா.ம.க.வின் தோல்வி, நன்றி - கல்கி வார இதழ், ஆகிய நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள்.
வள்ளுவர் கோட்டம்
01
Jun
ஜூன் 1 - வள்ளுவர் கோட்டத்தில் அய்யா நல்லகண்ணு அவர்களின் தலைமையில் நடைபெற்ற சூழலியல் போராளி முகிலன் உயிருடன் இருக்கிறாரா? தமிழக அரசே பதில் சொல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
சென்னை, வள்ளுவர் கோட்டம்
11
July
ஜூலை 11 - மத்திய அரசின் தொடர் தமிழின விரோதப் போக்கை கண்டித்து இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை
11
July
ஜூலை 11 - அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்ற கூடங்குளம் அணுக்கழிவு அபாயம் எச்சரிக்கை மாநாட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் சார்பில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
சென்னை
12
July
ஜூலை 12 - ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்துத்துவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட "தப்ரோஸ் அன்சாரி"படுகொலையைக் கண்டித்து இன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார் .
திருவள்ளூர்
13
July
ஜூலை 13 - திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஏராளமானோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணையும் நிகழ்ச்சி இன்று செங்குன்றத்தில் ஏழு தமிழர் விடுதலை மற்றும் நீண்ட நாள் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தும் கோரிக்கைப் பொதுக்கூட்டமாக நடைபெற்றது.
சென்னை
11
Aug
ஆகஸ்ட் 11 - மாவட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை எனது இல்லத்தில் நடைபெற்றது,கூட்டத்தின் போது தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளால் ஊக்கமளிக்கப்பட்டு சென்னை அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவன் திரு,விஷால். அவர்கள் என்னைச் சந்தித்து பதக்கத்தையும் சான்றிதழையும் காட்டி வாழ்த்து பெற்றார்.
கூடங்குளம்
13
Aug
ஆகஸ்ட் 13 - மதிமுக ஒருங்கிணைப்பில் அதன் பொதுச் செயலளார் திரு.வைகோ.அவர்கள் தலைமையில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.சுந்தர்ராஜன்.அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புக் கருத்தரங்கம் மற்றும் அணுஉலையின் தீமைகள் குறித்து விளக்கும் கொரிய மொழித் திரைப்படமான பன்டோரா திரையிடல் ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
மயிலாடுதுறை
18
Aug
ஆகஸ்ட் 18 - மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் திரு.ஜெயராமன்.அவர்களின் தலைமையில் இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற தமிழ்நாட்டின் இயற்கை வளம் - கனிம வளப் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.
திருச்சி
25
Aug
ஆகஸ்ட் 25 - மத்திய அரசின் கருப்புச் சட்டங்களான முத்தலாக்,NIA,UAPA,மற்றும் 370,35A, சிறப்பு சட்டப்பிரிவுகள் நீக்கம் மற்றும் கும்பல் படுகொலைகளைக் கண்டித்து இன்று மாலை தமுமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டண உரையாற்றினார்.
மதுரை
02
Sep
செப்டம்பர் 2 - தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெறக் கோரியும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வலியுறுத்தியும். நேற்று மதுரையில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
NLC கோரிக்கைப் பேரணி
10
Sep
செப்டம்பர் 10 - NLC ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம்,சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கைப் பேரணி நடைபெற்றது.
நெல்லை
15
Sep
செப்டம்பர் 15 - தமிழகத்தில் வடமாநிலத்தவர் ஆதிக்கத்தைக் கண்டித்தும், அரசு, தனியார் வேலை வாய்ப்புகளில் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை உறுதிச் சட்டம் இயற்ற வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் சார்பில் நேற்று நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சென்னை
17
Sep
செப்டம்பர் 17 - இந்த கல்வியாண்டு முதல் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற தமிழக அரசின் புதிய அரசாணையைக் கண்டித்து இன்று (17-09-2019) தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன போராட்டம் நடைபெற்றது.
கடலூர்
20
Sep
செப்டம்பர் 20 - 20/09/2019 கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் சிப்காட் வளாகத்தில் உள்ள பாண்டியன் கெமிக்கல்ஸ், மற்றும் பயோனீர் ஜெல்லைஸ் நிறுவனங்களின் நீண்டகால தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எனது தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
நெய்வேலி
21
Sep
செப்டம்பர் 21 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நெய்வேலியில் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
ஜெனிவா
23
Sep
செப்டம்பர் 23 - ஐக்கிய நாடுகள் மன்றத்தின்,மனித உரிமைகள் ஆணையத்தின் இணை அமர்வில் பங்கேற்று தலைவர் உரையாற்றினார்.
ஜெனிவா
25
Sep
செப்டம்பர் 25 - ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தில்(ஜெனிவாவில்) இன்று நடைபெற்ற அதன் துணை அமர்வில் பங்கேற்று தலைவர் உரையாற்றினார்.
ஜெனிவா
26
Sep
செப்டம்பர் 26 - ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தில் (ஜெனிவாவில்) இன்று நடைபெற்ற அமர்வில் பங்கேற்று ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை, மாவீரன் திலீபன் அவர்களின் உண்ணா விரதம்,அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து தலைவர் உரையாற்றினார்.
ஜெனிவா
27
Sep
செப்டம்பர் 27 - மாவீரன் திலீபன் அவர்களின் நினைவு நாளான (26/09/2019) ஜெனிவாவில் ஈழத் தமிழ் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட மாவீரன் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினார்.
சென்னை
07
Oct
அக்டோபர் 7 - சென்னை மண்ணடியில் வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற சங்பரிவார் தேச உருவாக்கத்திற்கு எதிரான பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
விழுப்புரம்
17
Oct
அக்டோபர் 17 - விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் திரு,நா.புகழேந்தி.அவர்களை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
மூலக்காடு
18
Oct
அக்டோபர் 18 - மாவீரன் திரு.வீரப்பன்.அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது நினைவிடம் அமைந்துள்ள மூலக்காடு கிராமத்திற்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
குவைத்
08
Nov
நவம்பர் 8 - குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்சார்பில் நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார்.
சென்னை
13
Nov
நவம்பர் 13 - பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் இன்று சென்னை, சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்று செய்தியாளர்களிடையே ஆலோசனைக் கூட்டத்தின் நோக்கம் குறித்தும் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கினார்.
சென்னை
21
Nov
நவம்பர் 21 - பாபாபர்மசூதி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி இன்று மாலை பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
நெய்வேலி
27
Nov
நவம்பர் 27 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நெய்வேலி அலுவலகத்தின் வினோத் அரங்கில் மாவீரர் நாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
பிரான்ஸ்
28
Nov
நவம்பர் 28 - பிரான்ஸ் நாட்டில் மிகுந்த எழுச்சியோடு பெரும் மக்கள் திரளோடு முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வில் பங்கேற்ற புகைப்படங்கள்.
சென்னை
06
Dec
டிசம்பர் 6 - பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் , பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை விரைந்து தண்டிக்கக் கோரியும்,சிறுபான்மை சமுதாய மக்களின் வழிபட்டு உரிமையை பாதுகாக்க கோரியும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
புதுக்கோட்டை
08
Dec
டிசம்பர் 8 - புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாலை சின்னப்பா பூங்கா அருகில் மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களும், திட்டங்களும் என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கண்டண உரையாற்றினார்.
சென்னை
09
Dec
டிசம்பர் 9 - மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்த சம்வத்தில் பலியான அப்பாவி தலித் மக்கள் மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடிய நாகை.திருவள்ளுவன் உள்ளிட்ட தோழர்களை விடுதலை செய்யக்கோரியும், வெண்மணி, கார்க்கி உள்ளிட்டவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரியும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா
12
Dec
டிசம்பர் 12 - மாலை இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சட்ட திருத்த நகலை எரித்து தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறோம்.
வேலூர்
15
Dec
டிசம்பர் 15 - தமிழக வாழ்வுரிமை கட்சியுடன் தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம்மாலை வேலூரில் எனது தலைமையில் நடைபெற்றது.
தாம்பரம்
20
Dec
டிசம்பர் 20 -தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து தாம்பரம் வட்டார உலமா சபை மற்றும் அனைத்து மஹல்லா ஜமாத்துக்கள் சார்பில் மாலை தாம்பரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
நெல்லை
29
Dec
டிசம்பர் 29 - நெல்லையில் SDPI கட்சி சார்பில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம்
30
Dec
டிசம்பர் 30 - குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்க்கு எதிராக எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள் சார்பில் ஒருங்கிணைக்ப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் தொடர் இசை முழக்கப்போராட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி

உரிமை மீட்சியே! இனத்தின் எழுச்சி!!

உறுப்பினராக