ஜனவரி 26 - தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் இரண்டாமாண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஐ நா மன்றத்தின் மூலம் ஈழத்தமிழர்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரியும் இலங்கை மிது போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரியும் நடத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சென்னை
05
Feb
பிப்ரவரி 5 - தமிழக ஆளுநர் மாளிகை நோக்கிய முற்றுகை போராட்ட காட்சிகள்.
வேலுர்
19
Feb
மார்ச் 19 - மத்திய அரசின் தொடர் ததமிழின விரோதப் போக்கினை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிறுவனர் தி.வேல்முருகன் அவர்களின் தலைமையில் வேலுரில் இன்று நடத்தப்பட்ட வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகையில் ஆயிரக்கணக்கனோர் திரண்டிருந்த புகைப்படங்கள்.
ஓசூர்
25
Mar
மார்ச் 25 - தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 25.3.2013 அன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களை பாலைவனமாக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்று நீரையே உறிஞ்சி 130 ஏரிகளுக்கு நீரை திருப்பிவிடும் கர்நாடகாவின் அடாவடியைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஓசூரில் பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்.
பெண்ணாடம் இறையூர்
09
Apr
ஏப்ரல் 9 - பெண்ணாடம் இறையூரில் உள்ள அம்பிகா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 6மாதங்களாக கரும்பு விவசாயிகளுக்கு 110 கோடி நிலுவை தொகை வழங்காததைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிறுவனர்,பண்ருட்டி.திவேல்முருகன் அவர்களின் தலைமையில் முற்றுகைபோராட்டம் நடைபெற்றது.
சென்னை
28
May
மே 28 - அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியை ஆங்கில வழிக் கல்வியாக தமிழக அரசு மாற்றி விட்ட நிலையில் அதை எதிர்த்து தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் (28/05/2013) காலை பத்து மணி அளவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்ககத்தை முற்றுகை செய்தது. இந்த போராட்டத்திற்கு தமிழ் தேசியப் பொதுவுடைமை கட்சி தலைவர் திரு.மணியரசன் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்தியா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சைதை சிவா, தோழர் தியாகு, இயக்குனர் கௌதமன் ஆகியோர் கலந்து கண்டனர்.
சென்னை
18
Jun
ஜூன் 18 - தமிழக அரசு வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து தமிழ் வழிக் கல்வி பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை புகுத்தி உள்ளது. தமிழ் நாட்டில் அரசு பள்ளிகளில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் வழிக் கல்விக்கு தமிழக அரசு இந்த ஆண்டு முதல் மூடு விழா காண்கிறது . தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளிலும் தமிழ்வழிக் கல்வியை கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலையில் 80 % இட ஒதுக்கீடு தரக் கோரியும் - தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் - வள்ளுவர் கோட்டம் ஆர்ப்பாட்டம்.
சீர்காழி
29
Jun
ஜூன் 29 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக மத்திய அரசின் தொடர் தமிழின விரோதப் போக்கினைக் கண்டித்து சீர்காழியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டப் பொதுக்கூட்டம் 29/06/2013 அன்று நடைபெற்றது. தொடரும் மத்திய அரசின் தமிழின விரோதப் போக்குகளான ஈழத் தமிழ்மக்களைக் கொல்லத் துணை போனது மட்டுமல்லாமல் தொடர்ந்து சிங்கள இராணுவத்துக்கு பயிற்சி அளிப்பது, மீனவர்கள் தாக்கப்படுவது, காவிரியில் தண்ணீர் தர மறுப்பது, மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் தர மறுப்பது போன்றவற்றைக் கண்டித்து ஆர்ப்பாட்டமும், பொதுக்கூட்டமும் இடம்பெற்றது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் அவர்கள் எழுச்சி உரை ஆற்றினார்.
சேலம்
24
Jul
ஜூலை 24 - சேலத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாநில பொது செயலாளர் காவேரி,மாநில அமைப்பு செயலாளர் காமராஜ்,மாநில துணை பொதுச் செயலாளர் ஜெயமோகன், சத்தியமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள், கராத்தே வெங்கடேஷ்,ஒ கே வீராசாமி ,சேலம் மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ்குமார்,சேலம் மாவட்ட இளைஞரணி தலைவர் சபரிஷ், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் சிவா மற்றும் கட்சியினர் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தனர்.
புவனகிரி
30
Jul
ஜூலை 30 - புவனகிரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் 30/07/2013 அன்று நடந்தது. ஒன்றிய செயலாளர் கரிகாலன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜா வரவேற்றார். மாவட்ட நிர்வாகக் குழு காசிநாதன், ஒன்றியத் தலைவர் செந்தில்குமார், நகர பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகக் குழு தலைவர் தி. திருமால்வளவன், மாவட்ட செயலாளர் முடிவண்ணன் பங்கேற்று பேசினர். மாநில நிர்வாகக் குழு ராஜேந்திரன், மாவட்ட தலைவர் ஆளவந்தார், உட்பட பலர் பங்கேற்றனர்.
திருச்சி
02
Aug
ஆகஸ்ட் 2 - கொழும்பில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு எதிர்ப்பு
தெரிவிக்காத இந்திய அரசை கண்டித்தும், மீனவர்கள் மீதான சிங்கள
கடற்படையினரின் தாக்குதலை கண்டித்தும், திருச்சியை அடுத்த திருமயத்தில்
பிஎச்எல் (BHEL) நிறுவனத்தின் ஒரு ஆலையைத் துவக்கி வைக்க 02/08/2013
காலை
10 மணிக்கு திருச்சி வந்த பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி
காட்ட முயன்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தமிழக
வாழ்வுரிமைக்
கட்சி நிறுவனத்தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் ஆகியோர் கலந்து
கண்டனர்.
சென்னை
07
Aug
ஆகஸ்ட் 7 - தமிழக அரசு நடப்புக் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள
அரசு
பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி
வகுப்புகளைத் தொடங்குகிறது. இத்திட்டதைக் கைவிட வலியுறுத்தி தமிழ்வழிக்
கல்வி கூட்டியக்கம் சார்பில் தமிழக அரசுக்கு விண்ணப்பம் கொடுக்கும்
கோரிக்கைப் பேரணி கோட்டையை நோக்கி 07.08.2013 அன்று சென்னையில்
நடைற்றது.
இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன்
பங்கேற்றார்.
சென்னை
10
Aug
ஆகஸ்ட் 10 - கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் இன்று
10/08/2013 காலை 10.00 மணி அளவில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே
ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கூடங்குளம் அணு உலையை மூட
வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மதிமுக
பொதுசெயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர்
பண்ருட்டி
தி. வேல்முருகன், துணைப்பொதுச் செயலாளர் சத்ரியன் து.வெ.
வேணுகோபால்,மனித
நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பெரியார் திராவிட கழக
தலைவர் கொளத்தூர் மணி கலந்து கண்டனர்.
சிதம்பரம்
15
Aug
ஆகஸ்ட் 15 - இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக வாழ்வுரிமைக்
கட்சி
நிறுவனர் பண்ருட்டி.வேல்முருகன் அவர்களின் ஆணையின்படி தமிழக
வாழ்வுரிமைக்
கட்சி மாணவர் சங்கம் சார்பில் சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில்
15/08/2013 காலை 11 மணி அளவில் மாநில மாணவர் சங்க தலைவர் இரவி.பிரகாஷ்
தலைமையில், மாவட்ட செயலாளர் முடிவண்ணன், ஒன்றிய செயலாளர்
கே.ஆர்.ஜி.தமிழ்,
மாவட்டஇளைஞர் சங்க தலைவர் சிவா, செயலாளர் சுரேஷ், சிதம்பரம்
நகரசெயலாளர்
தில்லை ஆகியோர் முன்னிலையில் மாநில மாணவர் சங்க தலைவர் இரவி.பிரகாஷ்,
பா.மாரியப்பன், எஸ்.புருஷேத்தமன், செ.ராம்ஜி, கா.கபில், எஸ்.கதிரவன்,
எஸ்.பிரபாகரன், நந்தகுமார், செ.அருளாளன், க.ஹரிகரன் உள்ளிட்டோர்
இரத்ததானம்
வழங்கினர்.
நாகை
17
Aug
ஆகஸ்ட் 17 - தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால்
தாக்கப்படுவதைக் கண்டித்தும், 65 தமிழக மீனவர்களைக் கைது செய்து
சிறையில்
வைத்துள்ள இலங்கை அரசைக் கண்டித்தும், அதைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கை
பார்க்கும் தமிழின விரோத மத்திய அரசைக் கண்டித்தும், இலங்கை தலைநகர்
கொழும்புவில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து
கொள்ளக்கூடாது என வலியுறுத்தியும் நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக்
கட்சி
சார்பில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர்
கருப்பு சரவணன் அவர்களின் தலைமையில் 17.08.2013 (சனிக்கிழமை)
மயிலாடுதுறை
தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு, மத்திய அரசை கண்டித்து
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக
வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு சரவணன்,
சிவா
உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி
20
Aug
ஆகஸ்ட் 20 - தனியாரிடம் உள்ள தூத்துக்குடி டாக் தொழிற்சாலையை அரசே
ஏற்று
நடத்த வலியுறுத்தியும், இலங்கை ராணுவத்தினரால் பாதிக்கப்பட்டுவரும்
தமிழக
மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் தமிழக
வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தூத்துக்குடியில் வருமானவரித்துறை
அலுவலகத்தை
முற்றுகையிடும் போராட்டம் இன்று 20.08.2013 காலை 11.00 மணி அளவில்
நடந்தது.
போராட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் மாரிச்செல்வம் தலைமை
வகித்தார்.
தூத்துக்குடி
20
Aug
ஆகஸ்ட் 20 - தனியாரிடம் உள்ள தூத்துக்குடி டாக் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தியும், இலங்கை ராணுவத்தினரால் பாதிக்கப்பட்டு வரும் தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 20.08.2013 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் குறித்து நாளேடுகளில் வந்துள்ள செய்திகளின் தொகுப்பு.
தஞ்சாவூர்
27
Aug
ஆகஸ்ட் 27 - தஞ்சை, திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி வேல்முருகன் சிறப்புரையாற்றினார்.
கூடங்குளம்
10
Sep
செப்டம்பர் 10 - கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் இறந்த 4 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி 10/09/2013 அன்று கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை போராட்ட பந்தலில் நடந்தது. நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களின் கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவ மக்களும், போராட்டக் குழுவினரும் கலந்து கொண்டனர். இதையொட்டி காலை 10 மணி அளவில் 4 பேர் உருவப் படங்களுக்கும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. மவுன ஊர்வலமும் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி
22
Sep
செப்டம்பர் 22 - மேட்டூர் அணையில் இருந்து வீணாகும் உபரிநீரை திருப்பி சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி பொதுக்கூட்டம் ஆத்தூரில் 22/09/2013 அன்று நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன், மாநில பொதுச்செயலாளர் வை.காவேரி, மாநில அமைப்புச் செயலாளர் காமராஜ், மாநில துணைப் பொதுச் செயாலாளர் ஜெயமோகன், மாநில துணைப் பொதுச் செயாலாளர் கருப்பு சரவணன், மாநில துணை பொதுச் செயலாளர் சு.க.சக்திவேலன், மாநில மாணவர் பாசறை தலைவர் ரவிபிரகாஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பொதுக்கூட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை
26
Sep
செப்டம்பர் 26 - தியாகி தீபம் தீலிபன் நினைவு வணக்க நிகழ்வும், போர்க்குற்றவாளி இராஜபக்சே நடத்தும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது ஏன்? விளக்கப்பொதுக்கூட்டம் 26/09/2013 சென்னை லாயிஸ் சாலை, வி.எம்.தெரு சந்திப்பு, ராயப்பேட்டையில் மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ , தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம்
02
Oct
அக்டோபர் 2 - கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும், அதற்கு எதிராகப் போராடி வரும் மக்கள் மீது போட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் புதன்கிழமை (02.10.2013) விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமை தாங்கினார்.
கடலூர்
02
Oct
அக்டோபர் 2 - பேரழிவை உண்டாக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு! போராடும் மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெறு! எனக் கோரி அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் சார்பில் 2.10.2013 (புதன்கிழமை) கடலூரில் கடலூர் மஞ்சக்குப்பம் திடல் அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உண்ணாவிரதப் போராட்டத்திம்
04
Oct
அக்டோபர் 4 - காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தோழர் தியாகுவுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் மற்றும் கட்சித் தொண்டர்கள் 04.10.2013 வெள்ளிக்கிழமை நேரடியாக ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவளித்தனர்.
கோவை
06
Oct
அக்டோபர் 6 - காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவையில் 06.10.2013 அன்று பொதுகூட்டம் நடைபெற்றது . இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்றார்.
சென்னை
15
Oct
அக்டோபர் 15 - ஐந்து முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி நடத்திய பெருந்திரளான போராட்டம் 15.10.13 செவ்வாய் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தியா இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி சட்டமன்ற தீர்மானம் இயற்ற வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்தார் பண்ருட்டி வேல்முருகன். இலங்கைக்கு எதிரான போராட்டங்களை பொறுத்தவரை இவ்வளவு பெரிய கூட்டத்தை அண்மையில் யாருமே கூட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போராட்டத்திற்கு பண்ருட்டி வேல்முருகன் தலைமை தாங்கினார். காஞ்சி மக்கள் மன்றம் கலைக் குழு சார்பில் தமிழீழ விடுதலை குறித்த எழுச்சிப் பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டது. பறை இசை முழங்க, இளைஞர் பட்டாளம் வீறு கொண்டு எழுந்ததை அங்கு காண முடிந்தது.
பத்திரிக்கை
21
Oct
அக்டோபர் 21 - கல்கி இதழில் வெளி வந்துள்ள செய்திகள்.
கடலூர்
28
Oct
அக்டோபர் 28 - காதமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் அணி சார்பில் கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று (28.10.2013) ஆர்ப்பாட்டம் நடந்தது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கவேண்டும். இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகை
12
Nov
நவம்பர் 12 - ரயில் மறியல் போராட்டம் - நாகை மாவட்டம் : #இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து செவ்வாய்கிழமை (12.11.2013) நாகை மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு சரவணன் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சிதம்பரத்திம்
12
Nov
நவம்பர் 12 - ரயில் மறியல் போராட்டம் - நாகை மாவட்டம் : #இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து செவ்வாய்கிழமை (12.11.2013) நாகை மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு சரவணன் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வள்ளுவர் கோட்டம்
12
Nov
நவம்பர் 12 - இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகளிர் அணி சார்பில் மத்திய அரசை கண்டித்து 12/11/2013 காலை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டன உரை ஆற்றினார். தொழிற்சங்க தலைவர் சைதை சிவராமன், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் சத்திரியன் து.வெ.வேணுகோபால் உள்ளிட்டோர் உரை ஆற்றினர் . இந்த ஒப்பாரிப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.
நாகை
12
Nov
நவம்பர் 12 - ரயில் மறியல் போராட்டம் - நாகை மாவட்டம் : #இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து செவ்வாய்கிழமை (12.11.2013) நாகை மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு சரவணன் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை
23
Nov
நவம்பர் 23 - காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாதென வலியுறுத்தி, இந்திய அரசு அலுவலகங்களைத் தாக்கிய திராவிடர் விடுதலைக் கழக சென்னை - சேலம் தோழர்கள் 7 பேர் மீதும், அதன் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் மீதும் தமிழக அரசால் ஏவப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், முள்ளிவாய்க்கால் முற்றம் எழுப்பிய ஐயா பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் மீதான பொய் வழக்குகளைக் கைவிடக் கோரியும், சென்னையில் இன்று (23.11.2013) காலை, 'அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரானக் கூட்டமைப்பு' சார்பில், பல்வேறு கட்சி - இயக்கங்கள் பங்கெடுத்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்னாடை போர்த்திக் கவுரவிக்கப்பட்டார்
26
Nov
நவம்பர் 26 - தேசியத் தலைவர் மேதகு வே.கரிகாலன் (எ) வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 59 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 26.11.2013 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் "கட்டிகை" வெட்டி கொண்டாடப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் "கட்டிகை" வெட்டினார். விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவரகளுக்கு தேசிய தலைவரின் சிந்தனை துளி பொறிக்கபட்ட பொன்னாடை போர்த்திக் கவுரவிக்கப்பட்டார்.
சிதம்பரம்
03
Dec
டிசம்பர் 3 - காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் சிதம்பரத்தில் 03.12.2013 (செவ்வாய்க்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போரூர்
14
Dec
டிசம்பர் 14 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் போரூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 14.12.2013 (சனிக்கிழமை) மதியம் 2.00 மணி அளவில் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் காவேரி, அமைப்பு செயலாளர் இணை பொதுச் செயலாளர் சண்முகம், மாநில துணை பொதுச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சீர்காழி
03
Dec
டிசம்பர் 17 - தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் கேரள மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ள அட்டப்பாடியில் உள்ள தமிழர்களை வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ள கேரள அரசைக் கண்டித்தும், அதனைக் கண்டுகொள்ளாத மத்திய அரசைக் கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சீர்காழி பேருந்து நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு சரவணன் அவர்கள் தலைமையில் 17.12.2013 மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதில் 200 மேற்பட்டோர் பங்கேற்றனர்.