கொள்கைகள்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி

நீர் இன்றி அமையாது உலகெனில் யார் யாருக்கும் வான் இன்றி அமையாது ஒழுக்கு! என்கிற ஐயன் வள்ளுவன் கூற்றுப்படி நாட்டின் நீர் மேலாண்மையை மேம்படுத்தி காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு போன்ற நீராதார உரிமையை மீட்டு நஞ்சில்லா உணவு அதை உற்பத்தி செய்கின்ற விவசாயின் உரிமைகளை பாதுகாப்பது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையாம். என்கிற ஐயன் வள்ளுவன் கூற்றுப்படி பிறப்பினால் அனைவரும் சமம்.சாதி மத பேதமை களைந்து இல்லாரும் உடையாரும் அற்ற சமனிய சமூகத்தை படைப்பது.

வயிற்றிற்கு சோறிடல் வேண்டும்- இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்! என்ற பாரதியின் கூற்றுப்படி நாட்டில் வறுமை ஏழ்மை மற்றும் வேலை இல்லா திண்டாட்டத்தை கலைத்து அனைவருக்கும் தரமான சமமான கல்வி மேலும் வேலைவாய்பில் தரப்படுகிற இட ஒதுக்கீடு சமூக நீதி கோட்பாட்டை பாதுகாப்பது.

தீங்கு நேர்திடின் தமிழருக்கே இந்த தேகம் இருந்தொரு லாபம் உண்டோ! என்கிற பாவேந்தர் பாரதிதாசன் கூற்றுப்படி தமிழ் தமிழர் கலை கலாச்சாரம் பண்பாடு மொழி மற்றும் தொன்மம் இவற்றை போற்றி பாதுகாப்பது . எனது மண் எனது ஆட்சி என்கிற தமிழ் தேசிய சித்தாந்தத்தின் மூலம் தமிழ் தேசிய அரசியலை தமிழ் நாட்டில் அமைப்பது.

வட வேங்கடம் தென் குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்.என்கிற தொல்காப்பியம் நன்னூல் கூற்றுப்படி எமது நாட்டு பரப்பில் மது சூது இவற்றை ஒழித்து இயற்கை கனிமங்கள் கொள்ளையை தடுத்து மரபுசாரா எரிசக்தியை மேம்படுத்தி அனுஉலை மற்றும் ஹாட்ரோகார்பன் திட்டத்தை புறதள்ளி அனைத்து உயிர்களும் வாழும் ஒர் பல்லுயிர் சுழலை இத் தேசத்தில் உருவாக்குதல்.

உறுப்பினராக
thalaivar

தமிழக வாழ்வுரிமைக் கட்சி

உரிமை மீட்சியே! இனத்தின் எழுச்சி!!

உறுப்பினராக