ஜனவரி 3 - இலங்கை சிறையில் வாடும் 210 தமிழகமீனவர்களை உடனடியாக விடுதலை
செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும், இலங்கை
கடற்படையால்
தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், இலங்கை
கடற்படையால்
பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க கோரியும், கச்சத்தீவை மீட்க
கோரியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 03.01.2014
(வெள்ளிக்கிழமை)
சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில்
26
Feb
பிப்ரவரி 26 - மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இனப்படுகொலை
புரிந்த இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என
வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர்
கோட்டத்தில் 26.02.2014 நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக்
கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், சத்ரியன்
து.வேணுகோபால், சைதை சிவா, தேவராஜ், அப்துல்லா உள்ளிட்ட நிர்வாகிகள்
கலந்துகொண்டனர்.
சேலம்
23
Feb
பிப்ரவரி 23 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாபெரும் சேலம் மாநாடு.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில்
26
Feb
பிப்ரவரி 26 - மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இனப்படுகொலை
புரிந்த இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என
வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர்
கோட்டத்தில் 26.02.2014 நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக்
கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், சத்ரியன்
து.வேணுகோபால், சைதை சிவா, தேவராஜ், அப்துல்லா உள்ளிட்ட நிர்வாகிகள்
கலந்துகொண்டனர்.
சென்னை மெரினா
18
May
மே 18 - தமிழ் இனப் படுகொலையின் 5 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி
சென்னை
மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகில் மே–17 இயக்கம் சார்பில்
மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று
18.05.2014 மாலை நடைபெற்றது.
இராயபுரம்
02
Aug
ஆகஸ்ட் 2 - சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI),
அனைவரிடமும்
சகோதரத்துவமும், நல்லிணக்கமும் நிலவ ஆண்டுதோறும் பெருநாள் சந்திப்பு
நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டும் பெருநாள்
சந்திப்பு நிகழ்ச்சி 02.08.2014 அன்று மாலை 5 மணிக்கு இராயபுரம்
ரம்ஜான்
மஹாலில் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர்
பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை
வழங்கினார்.
சென்னை
03
Aug
ஆகஸ்ட் 3 - சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம்.
சென்னை எழும்பூர்
02
Aug
ஆகஸ்ட் 9 - காஸா மீதான இஸ்ரேல் இனப்படுகொலைகளைக் கண்டித்தும்
இஸ்ரேலுடனான
உறவுகளை இந்திய மத்திய அரசு துண்டிக்க வலியுறுத்தியும் தமிழக
வாழ்வுரிமைக்
கட்சி சார்பில் 09.08.2014 (சனிக்கிழமை) காலை சென்னை எழும்பூர் லாங்ஸ்
கார்டன் ஆதித்தனார் சாலையில் கட்சியின் மாநில பொருளாளர் அக்ரம்கான்
தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
சென்னை
19
Aug
ஆகஸ்ட் 19 - புலிப்பார்வை மற்றும் லைக்கா தயாரிக்கும் கத்தி
திரைப்படத்தை
எதிர்த்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மாணவர் அமைப்புகளின் கூட்டு
செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில்
நடைபெற்றது.
விழுப்புரம்
30
Aug
ஆகஸ்ட் 30 - விக்கிரவாண்டியில் டோல்கேட்டை முற்றுகையிட சென்ற தவாக
நிறுவனர்
வேல்முருகன் உள்ளிட்ட 1000 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெடுஞ்சாலைகளில்
உள்ள சோதனை சாவடிகளில் கட்டண வசூல் என்ற பெயரில், பகல் கொள்ளை
நடைபெற்று
வருவதை கண்டித்தும், தற்போது வாகனங்களின் கட்டணம் 10 முதல் 40 சதவீதம்
வரை
உயர்த்தப்பட்டு உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று தமிழகத்தில்
உள்ள
41 சோதனை சாவடிகளிலும் முற்றுகை போராட்டம் நடத்தப்படுமென தமிழக
வாழ்வுரிமை
கட்சி அறிவித்து இருந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி
டோல்கேட்டை முற்றுகையிடும் போராட்டத்துக்கு தவாக நிறுவனர் வேல்முருகன்
தலைமை தாங்கினார். 1000க்கும் மேற்பட்ட தவாகவினர் முற்றுகை,
ஆர்ப்பாட்டத்துக்கு திரண்டனர். அவர்களை விழுப்புரம் டிஎஸ்பி சீதாராமன்
தலைமையிலான விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் தடுத்து
நிறுத்தி கைது செய்தனர்.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில்
01
Sep
செப்டம்பர் 1 - நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும்
ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை வள்ளுவர்
கோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களுடன் தமிழக
வாழ்வுரிமைக்
கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் ஒருநாள் அடையாள
உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில்
03
Sep
செப்டம்பர் 3 - சுப்ரமணியசுவாமியின் பேச்சை கண்டித்து தமிழக
வாழ்வுரிமைக்
கட்சியின் சார்பில் தர்மபுரியில் இன்று 03.09.2014 காலை
சுப்ரமணியாசுவாமியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிரணி செயலாளர் ஜெயலட்சுமி பாலு, மாநில
இளைஞசரணி துணை தலைவர் சிவக்குமார், மாவட்ட பொருளாளர் கந்தசாமி, ரமேஷ்,
திருப்தி, எல்.ஐ.சி செல்வம், பைரோஸ், சதாம் உள்ளிட்ட 50க்கும்
மேற்பட்டோர்
பங்கேற்றனர்.
இடிந்தகரை அணு உலை
10
Sep
செப்டம்பர் 10 - இடிந்தகரை அணு உலை எதிர்ப்புப் போராட்ட தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வில் "அணு உலையில் அய்யாயிரம் மெகாவாட்!!(அதிகாரிகள் அதிர்ச்சி) " என்ற நூலை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்கள் வெளியிட்டார்
கூடங்குளம்
11
Sep
செப்டம்பர் 11 - கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்.
சென்னை
24
Sep
செப்டம்பர் 24 - தலைநகர் சென்னையை உலுக்கியெடுத்த
150க்கும் மேற்பட்ட அரசியல் இயக்கங்கள், தமிழர்
அமைப்புகள், மாணவர் இயக்கங்கள், படைப்பாளிகள், மனித
உரிமை
ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என 24.09.2014
அன்று
நடைபெற்ற மாபெரும் தமிழர் நீதிப் பேரணியில் பங்கேற்று
தமிழர் தம் ஒற்றுமையை வெளிப்படுத்திய அத்தனை தோழமை
சக்திகளுக்கும் என் பெரு நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன்! தமிழர் வாழ்வுரிமையை மீட்டெடுப்பெதற்கான
பெரும் போராட்டத்தில் இது முதல் தொடக்கமே! தமிழர்
வாழ்வுரிமை வென்றிட ஜாதி, மத, கட்சி எல்லைகள.
சென்னை
18
Oct
அக்டோபர் 18 - என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி
நிரந்தரம் செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்
தலைவர் திரு. தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில்
கொட்டும்
மழையில் என்.எல்.சியின் தலைமை அலுவலகத்தை
முற்றுகையிட்டு
போராட்டம்நடைபெற்றது.போராட்டத்தில் ஈடுபட்ட
ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பத்திரிகை
25
Oct
அக்டோபர் 25 - என்.எல்.சி ஒபந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டம் பற்றி குமுதம் ரிப்போர்ட்டர்ல் செய்தி வெளியிட்டுள்ளது .கத்தி சண்டை நிஜமா நாடகமா?என்ற தலைப்பில் நக்கீரன்ல் செய்தி வெளியிட்டுள்ளது .
சென்னை
31
Oct
அக்டோபர் 31 - இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் இன்று காலை முற்றுகையிட்டனர் ஆயிரக்கணக்கானோர் கைது ! சென்னை, அக்.31 இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் இன்று காலை முற்றுகையிட்டனர்.
மலேசியா
13
Nov
நவம்பர் 13 - மலேசியாவின் பினாங்குவில் நடைபெற்ற
அனைத்துலக
தமிழ் மாநாட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்
தி.வேல்முருகன் பங்கேற்றார். பினாங்கு துணை முதல்வர்
பேராசிரியர் ராமசாமி தலைமை வகித்த இந்த மாநாட்டில்
கலந்து
கொண்ட இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,
மலேசியா
எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான
அன்வர்
இப்ராஹிம் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தமிழர்
பிரதிநிதிகளையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்
தி.வேல்முருகன் சந்தித்து உரையாடினார். — தி.
வேல்முருகன்
முருகன் உடன்.
ஆந்திர எல்லையில்
09
Dec
டிசம்பர் 9 - இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு
கருப்புக்
கொடி காட்ட நூற்றுக்கணக்கான வாகனங்களில் திருப்பதி
நோக்கி
சென்ற ஆயிரக்கணக்கான தமிழர் வாழ்வுரிமைக்
கூட்டமைப்பினர்
ஆந்திர எல்லையில்தடுத்து நிறுத்தம்- ஒரு மணிநேரம் சாலை
மறியல் போராட்டம் நடத்தப்பட்டது- கொடுங்கோலன் ராஜபக்சே
கொடும்பாவியும் அதே இடத்தில் எரிக்கப்பட்டது.படங்கள்
(டிசம்பர் 9,2014).
சென்னை
10
Dec
டிசம்பர் 10 - மூத்த இடதுசாரித் தலைவர் அய்யா
நல்லகண்ணு
தலைமையிலான தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை
இயக்கம்
சார்பில் 'தீண்டாமை எனும் வன்கொடுமையை எதிர்ப்போம்-
கவுரவக் கொலைகளைத் தடுப்போம்; எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை
தடைச் சட்டத்தை பலப்படுத்துவோம் ஆகிய கோரிக்கைகளை
வலியுறுத்தி சென்னையில் இன்று உண்ணாநிலைப் போராட்டம்
நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்
பண்ருட்டி தி. வேல்முருகன் சிறப்புரையாற்றினார்.
புதுச்சேரி
13
Dec
டிசம்பர் 13 - தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்
முக்கியமான
போராளியாக விளங்கிய பிரிகேடியர் பால்ராஜ் அவர்களைப்
பற்றிய
"பிரிகேடியர் பால்ராஜ் சமர்க்கள நாயகன்” நூல்
வெளியீட்டு
விழா 13.12.2014 சனிக்கிழமை மாலை 5 மணியளவில்
புதுச்சேரி
பெரியார் திடலில் நடைபெற்றது.