போராட்டங்களின் வருடம்
சென்னை
30
Jan
ஜனவரி 30 - 60 சதவிகிதத்துக்கு மேல் பேருந்து கட்டணத்தை உயர்த்தி,ஏழை எளிய மக்களின் தலையில் சுமையை ஏற்றிய தமிழக அரசைக் கண்டித்தும் இதனை திரும்ப பெற வலியுறுத்தியும். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஜனவரி 30 அரசு போக்குவரத்துக் கழகத்தின் பல்லவன் இல்லம், முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
சென்னை, வள்ளுவர் கோட்டம்
17
Feb
பிப்ரவரி 17 - காவிரி மீளாய்வு வழக்கின் தீர்ப்பில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட வரலாற்றுத் துரோகம் மற்றும் அநீதியைக் கண்டித்து , 17-02-2018 காலை 11:00 மணி, அளவில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ்வார்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி.திரு.தி.வேல்முருகன்.அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரு,பெ.மணியரசன்.அவர்கள்,தலைவர்,தமிழ்த்தேசிய பேரியக்கம். இயக்குனர். திரு,களஞ்சியம். அவர்கள்,தலைவர்,தமிழர் நலம் பேரியக்கம்.இயக்குனர்,திரு,கவுதமன்.அவர்கள்.ஆகியோரும் தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சென்னை, கோயம்பேடு
19
Feb
பிப்ரவரி 19 - கூலி வேலைக்கு சென்ற 5அப்பாவி தமிழர்களை ஆந்திராவில் செம்மரங்களை வெட்ட வந்ததாக பொய்யான குற்றசாட்டை கூறி படுகொலை செய்துள்ள ஆந்திர அரசையும், காவல்துறையையும் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக 19.02.2018 - மாலை 4.00 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆந்திர பேருந்துகளை சிறைப்பிடிக்கும் போராட்டம் நடைபெற்றது, போராட்டத்தின் முடிவில் 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டோம்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சென்னை
21
Feb
பிப்ரவரி 21 - பயிர் காப்பீட்டை வழங்க மறுக்கும் ICICI Lombard (ஐ சி ஐ சி ஐ லொம்பார்டு) காப்பீட்டு நிறுவனத்தைக் கண்டித்து 2 ம் நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டத்தில் தற்போது தலைவருடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு.திருமாவளவன் அவர்கள்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சென்னை
22
Feb
பிப்ரவரி 22 - 3 நாட்களாக பகலிலும் இரவிலும் தொடரும் போராட்டம். பயிர் காப்பீட்டை வழங்க மறுக்கும் ICICI Lombard (ஐ சி ஐ சி ஐ லொம்பார்டு) காப்பீட்டு நிறுவனத்தைக் கண்டித்து 2 ம் நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டத்தில் கடந்த 3 நாட்களாக இரவு பகலாக பங்கேற்றுள்ள என்னுடன் தற்போது, SDPI கட்சித் தலைவர் திரு. தெஹலான் பாகவி .அவர்கள் மற்றும் தமிழர் நலம் பேரியக்கம் தலைவர் இயக்குனர் திரு.களஞ்சியம். அவர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சென்னை
23
Feb
பிப்ரவரி 23 - தமிழக வாகனங்களைத் தாக்கி கேரளாவுக்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி இனவெறிச்செயலில் ஈடுபட்ட கேரள எம்எல்ஏ கிருஷ்ணகுட்டி மீது கைது நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், கேரளா அரசிற்கு அழுத்தம் தரக்கோரியும், சென்னையில் அமைந்துள்ள கேரள மாநில சுற்றுலா அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள அதிகாரியிடம் தமிழ் அமைப்புகளின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சென்னை
24
Feb
பிப்ரவரி 24 - நியூஸ் 7 தொலைக்காட்சியின் தங்க தாரகை விருதுகள் வழங்கும் விழாவில் தலைவர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சென்னை
26
Feb
பிப்ரவரி 26 - ஆந்திராவில் செம்மரகட்டை கடத்தியதாக 5 தமிழர்களை சுட்டுக் படுகொலை செய்த ஆந்திர அரசை கண்டித்தும், சிறையில் உள்ள 3000 தமிழர்களை விடுதலை செய்யவும், மவுனம் சாதித்து வரும் தமிழக அரசையும் கண்டித்து சென்னையில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சென்னை
03
Mar
மார்ச் 3 - நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யும் தமிழக அரசின் முடிவை கைவிடக் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சட்டக் கல்லூரி மாணவர்களை, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில், சந்தித்து தலைவர் ஆதரவு தெரிவித்தார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சென்னை, வள்ளுவர் கோட்டம்
06
Mar
மார்ச் 6 - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சிரியா மக்களுக்கு தமிழ்நாட்டின் அஞ்சலி, சுடரேந்தல் – அமைதி வணக்கம், நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர், பண்ருட்டி,திரு,தி.வேல்முருகன்,அவர்கள் கலந்து கொண்டு கண்டண உரையாற்றினார்கள்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சென்னை, வள்ளுவர் கோட்டம்
10
Mar
மார்ச் 10 - காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக 10.03.2018 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் மண்டல விவசாய வாழ்வுரிமை மாநாடு தஞ்சாவூரில் உள்ள திலகர் திடலில் நடைபெற்றது........
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சென்னை
11
Mar
மார்ச் 11 - சென்னையில், பாவலரேறு தமிழ்க்களம் சார்பில் நடைபெற்ற அய்யா பாவலரேறு பெருஞ்சித்தனார், அவர்களின் 85 ம் பிறந்தநாள், மற்றும் திரு பொழிலன்.அவர்களின், வேத வெறி இந்தியா, தமிழ்த் தேச விடுதலைப் போராட்டம், ஆகிய நூல்கள் வெளியீட்டு விழாவில் பங்கேற்று, நூல்களை பெற்றுக்கொண்டு தலைவர் உரை.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
பத்திரிகை
16
Mar
மார்ச் 16 - தினத்தந்தி,தினமலர்,தினமணி,தினகரன்,தி ஹிந்து தமிழ், Indian Express ....ஆகிய நாளிதழ்களில்,வெளிவந்துள்ள செய்திகள்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சென்னை
17
Mar
மார்ச் 17 - இலங்கையில் தமிழ் இசுலாமியர்கள் மீதான சிங்கள இனவெறி தாக்குதலைக் கண்டித்து 17.03.2018 காலை 11.00 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகம் முற்றுகைப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
பத்திரிகை
22
Mar
மார்ச் 22 - தினத்தந்தி. தினகரன்.தினமலர் ஆகிய நாளிதழ்களில்,வெளிவந்துள்ள செய்திகள்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
23
Mar
மார்ச் 23 - (23-03-2018 ) ஒசூரில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின், கிருஷ்ணகிரி மேற்கு மாவட் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கட்சியின் கொடியேற்றும் நிகழ்வுகள்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தஞ்சை
27
Mar
மார்ச் 27 - தஞ்சை, அம்மாபேட்டையில், விவசாய சங்கங்கள், மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில், டெல்டா மாவட்டங்களை ஹைட்ரோ கார்பன்,மீத்தேன், போன்ற நாசகார திட்டங்களின் மூலம் பாலைவனமாக்க முயலும்,மத்திய அரசின் ONGC நிறுவனத்தைக் கண்டித்து நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி. சார்பில் கலந்து கொண்டு கண்டண உரை. போராட்டத்தின் முடிவில் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
உளுந்தூர்
01
Apr
ஏப்ரல் 1 - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து 43 சுங்கசவடிகளிலும் சுங்கவரி தர மறுக்கும் போராட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 01.04.2018 காலை 11.00மணி முதல் நடைபெற்றது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உளுந்தூர் பேட்டை சுங்க சாவடியில் எனது தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
உளுந்தூர்
12
Apr
ஏப்ரல் 12 - காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பிரதமர் திரு.மோடி அவர்களின் தமிழக வருகையை எதிர்த்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் இன்று (12-04-2018)சென்னையில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடை பெற்றது. முடிவில் கைது செய்யப்பட்டுள்ளோம்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சென்னை
14
Apr
ஏப்ரல் 14 - சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 128 வது பிறந்த நாளான கோயம்பேட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது. உடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், திரு.திருமாவளவன் . அவர்கள் மற்றும் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர். டாக்டர், திரு.சேதுராமன். அவர்கள் ஆகியோர் உள்ளனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சென்னை
15
Apr
ஏப்ரல் 15 - 8 வயது சிறுமி ஆஸிபா.8 பேர் கொண்ட காம கொடூரர்களால், பாலியல் வல்லுறவுக்குட்ப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதைக் கண்டித்து த,மு,மு,க, சார்பில் இன்று சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நடத்தப்பட்ட கண்டண ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டண உரை.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சென்னை
18
Apr
ஏப்ரல் 18 - மத்திய அரசே தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஆளுநரை திரும்ப பெறு! தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி,தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்,இன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.கட்சித் தலைவர், திரு.திருமாவளவன் . அவர்கள் மற்றும் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர். டாக்டர், திரு.சேதுராமன். அவர்கள் ஆகியோர் உள்ளனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
பத்திரிகை
19
Apr
ஏப்ரல் 19 - தமிழக மக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை இருக்கிறது. - குமுதம் வார இதழ் – நாளிதழ்ளில் வெளிவந்துள்ள செய்திகள்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சென்னை
04
May
மே 4 - மண்டல NEET தேர்வுக்கானஅலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம். தமிழக மாணவர்கள் நீட் தேர்வை சென்ற ஆண்டை போன்று இந்த ஆண்டும் தமிழகத்திலே எழுதுவதற்கும், மேலும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்க்கு நிரந்தர விலக்கு அளிக்க கோரியும் NEET தேர்வுக்கான மண்டல அலுவலர் அவர்களை இன்று 04.05.2018 பகல் 11.30 மணிக்கு CBSE- NEET அலுவலகத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சந்தித்து மனு அளித்த பின்னர், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
பத்திரிகை
19
May
மே 8 - நீடதினமணி, தினத்தந்தி, தினகரன், தி ஹிந்து தமிழ் நாளிதழ்ளில் வெளிவந்துள்ள செய்திகள்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சென்னை
31
May
மே 31 - சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன். அவர்கள் மே 31 காலை மருத்துவ மனையிலிருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
பத்திரிகை
16
Jun
ஜூன் 16 - நக்கீரன் வார இதழ் - தமிழ் நாளிதழ்ளில் வெளிவந்துள்ள செய்திகள்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
பத்திரிகை
04
Jul
ஜூலை 4 - கலைஞரும்,ஜெயலலிதாவும் அரசியலில் இருந்திருந்தால் வாய் திறப்பாரா கவர்னர்?__ வெடிக்கும் வேல்முருகன்...... நக்கீரன் வார இதழ் - தமிழ் நாளிதழ்ளில் வெளிவந்துள்ள செய்திகள்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
பத்திரிகை
14
Jul
ஜூலை 14 - நிலத்தை பிடுங்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் - வெடிக்கும் வேல்முருகன். நன்றி - ஜூனியர் விகடன் - தமிழ் நாளிதழ்ளில் வெளிவந்துள்ள செய்திகள்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
நெய்வேலி
27
Nov
நவம்பர் 27 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நெய்வேலி கொடிவீரன் வினோத் அரங்கில் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
பத்திரிகை
01
Dec
டிசம்பர் 1 - கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண உதவிகள், குறித்து புதிய தலைமுறை வார இதழ்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சேப்பாக்கம்
07
Dec
டிசம்பர் 7 - வெள்ளியன்று (07-12 2018) எழுவர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் அவர்கள் உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தலைவர் பங்கேற்பு.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
நெய்வேலி
24
Dec
டிசம்பர் 24 - நெய்வேலி NLC மூன்றாம் சுரங்க விரிவாக்க பணிக்கு 40க்கும் மேற்பட்ட கிராமங்களின் வாழ்வாதாரமான விளைநிலங்களை கையகப்படுத்தி NLC நிர்வாகத்திற்கு தாரைவார்க்கத் துடிக்கும் மத்திய, மாநில, அரசுகளை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 24.12.2018 அன்று விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை
01
Apr
ஏப்ரல் 1 - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து 43 சுங்கசவடிகளிலும் சுங்கவரி தர மறுக்கும் போராட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 01.04.2018 காலை 11.00மணி முதல் நடைபெற்றது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உளுந்தூர் பேட்டை சுங்க சாவடியில் எனது தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
காவிரி
12
Apr
ஏப்ரல் 12 - காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பிரதமர் திரு.மோடி அவர்களின் தமிழக வருகையை எதிர்த்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் இன்று (12-04-2018)சென்னையில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடை பெற்றது. முடிவில் கைது செய்யப்பட்டுள்ளோம்.
சென்னை
14
Apr
ஏப்ரல் 14 - சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 128 வது பிறந்த நாளான கோயம்பேட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது. உடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், திரு.திருமாவளவன் . அவர்கள் மற்றும் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர். டாக்டர், திரு.சேதுராமன். அவர்கள் ஆகியோர் உள்ளனர்.
சென்னை
15
Apr
ஏப்ரல் 15 - 8 வயது சிறுமி ஆஸிபா.8 பேர் கொண்ட காம கொடூரர்களால், பாலியல் வல்லுறவுக்குட்ப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதைக் கண்டித்து த,மு,மு,க, சார்பில் இன்று சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நடத்தப்பட்ட கண்டண ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டண உரை.
கிண்டி
18
Apr
ஏப்ரல் 18 - மத்திய அரசே தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஆளுநரை திரும்ப பெறு! தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி,தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்,இன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.கட்சித் தலைவர், திரு.திருமாவளவன் . அவர்கள் மற்றும் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர். டாக்டர், திரு.சேதுராமன். அவர்கள் ஆகியோர் உள்ளனர்.
பத்திரிகை
19
Apr
ஏப்ரல் 19 - தமிழக மக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை இருக்கிறது. - குமுதம் வார இதழ் – நாளிதழ்ளில் வெளிவந்துள்ள செய்திகள்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி

உரிமை மீட்சியே! இனத்தின் எழுச்சி!!

உறுப்பினராக