அறிக்கைகள்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி

நாமே நமது வரலாற்றுப் பண்பாட்டுத் தமிழ் இலக்கியச் சின்னமாக விளங்கும் வள்ளல் வேள் பாரி மன்னனின் பறம்புமலையைத் தகர்ப்பதா? அங்கு சென்ற ‘பறம்புமலை பாதுகாப்பு இயக்கம்’ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் முன்னணிப் பொறுப்பாளர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வதா?- ஆகஸ்ட் 02, 2020

ஈகைத் திருநாளாம் பக்ரித் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சிறப்பு வாழ்த்துகள்!- ஜூலை 31, 2020

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை கல்வியினின்றும் அப்புறப்படுத்தி, சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் மோடி! கார்ப்பொரேட் தொண்டூழியத்திற்கான மோடியின் கொத்தடிமைக் கல்விமுறைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலளித்ததை வன்மையாகக் கண்டிப்பதுடன், அதனைத் திரும்பப்பெறக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! - ஜூலை 30, 2020

மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு! இந்த உத்தரவை குறித்த காலத்திற்குள் விரைந்து நிறைவேற்றுமாறு கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! - ஜூலை 27, 2020

குறைவான பயணிகளே வருவதால் வருமானம் குறைவாக உள்ள 6,000 ஸ்டேஷன்களில் இனி ரயில்கள் நிற்காது! இந்த முடிவும் சரி, ரயில்வே தனியார்மயமும் சரி, தேசத்திற்கும் அதன் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் எதிரானதே! மக்களின் உற்பத்தி மற்றும் வரி வருவாயில்தான் அரசு என்கிறபோது, அந்த வருவாயை ஒருசில கார்ப்பொரேட்களுக்குக் கைமாற்றுவதா அரசின் வேலை? இதை வன்மையாகக் கண்டிப்பதுடன், இதனை உடனடியாகத் திரும்பப்பெறக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! - ஜூலை 26, 2020

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் மோடி அரசு கொண்டுவந்திருக்கையில், தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களுக்கு கடன் வழங்கக்கூடாது என நோட்டீஸ் அனுப்பியது பழனிசாமி அரசு! விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்குப் பின் முதல்வர் இதை மறுத்தாலும், வேளாண் கூட்டுறவுச் சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கீழ் தள்ளும் மற்றும் அவற்றை ஒழித்துக்கட்டும் அவரது உள்நோக்கத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், உடனடியாக அதைத் திரும்பப்பெறுமாறு எச்சரிக்கவும் செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!- ஜூலை 24, 2020

உறுப்பினராக
thalaivar

தமிழக வாழ்வுரிமைக் கட்சி

உரிமை மீட்சியே! இனத்தின் எழுச்சி!!

உறுப்பினராக