ஜனவரி 6 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் இளம்புயல் பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்களது தந்தையார் தெய்வத் திரு தங்க. திருநாவுக்கரசு அவர்கள் திரு உருவப் படத் திறப்பு நிகழ்ச்சி (இடம்: கடலூர் மாவட்டம் புலியூர் காட்டுசாகை: நாள்:4-1-2015)
சென்னை
13
Jan
ஜனவரி 13 - நடிகர் ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வந்த லிங்கா திரைப்படத்தால் ஏற்ப்பட்ட இழப்பை ஈடுசெய்யக்கோரி அத்திரைப்படத்தின் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர் அவர்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு,தி.வேல்முருகன் அவர்கள் நேரில் சென்று உண்ணாவிரதத்தை பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார் அந்நிகழ்வின் புகைப்படங்கள்.
தஞ்சாவூர்
19
Jan
ஜனவரி 19 - ம.தி.மு.க பொதுச் செயலாளர் திவைகோ அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் தொடர்வண்டி நிலையம் அருகில் உள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
தஞ்சாவூர்
21
Jan
ஜனவரி 21 - ம.தி.மு.க பொதுச் செயலாளர் திவைகோ அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் தொடர்வண்டி நிலையம் அருகில் உள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
கிருஷ்ணகி
25
Jan
ஜனவரி 25 - தமிழக வாழ்வுரிமைக் கட்சி 4ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மொழிப்போராளிகளுக்கான வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டம் 25.01.2015 அன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பல ஆயிரகணக்கானோர் கலந்து கொண்ட போது(நான்கு புறங்களில் இருந்து) எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
சென்னை
29
Jan
ஜனவரி 29 - தமிழீழத் தமிழினம் காக்க தன்னுயிர் ஈந்த வீரத் தமிழன் மாவீரன் முத்துக்குமாருக்கு சென்னை கொளத்தூரில் உள்ள மாவீரன் முத்துக்குமார் நினைவிடத்தில் (29-1-2015) ஈகச்சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் இளம்புயல் பண்ருட்டி தி. வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் அய்யா நல்லகண்ணு, தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் த. வெள்ளையன், புரட்சித் தமிழன் நடிகர் சத்யராஜ், பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள், இயக்குநர் கவுதமன், கரும்புலி முத்துக்குமாரின் குடும்பத்தினர் உட்பட நூற்றுக்கணக்கானோர் வீரவணக்கம் செலுத்தினர்.
பிரக்கடையான்பட்டி
07
Feb
பிப்ரவரி 7 - மொழிஞாயிறு பாவாணர் பிறந்தநாள் விழா! பழந்தமிழரசும் மரபும் நூல் வெளியிட்டு விழா பிரக்கடையான்பட்டியில் 07.02.2015 அன்று நடைபெற்றது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி.தி .வேல்முருகன்,சுப .உதயகுமாரன் ,புதுக்கோட்டை பாவாணன்,அரிமாவளவன்,செந்தில் மள்ளர்,ஒரிசா பாலு ,.தன்மாணன் உள்ளிட்ட ஏராளமான அறிஞர் பெருமக்கள் பங்கேற்றார்கள்.
ஸ்ரீரங்கம்
13
Feb
பிப்ரவரி 13 - 13-ந்தேதி நடைபெற உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி அவர்களை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் இளம்புயல் பண்ருட்டி திரு,தி. வேல்முருகன் அவர்கள் அங்கு நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார் அந்நிகழ்வு குறித்த புகைப்படங்கள்.
பெரம்பலூர்
03
Mar
மார்ச் 3 - பருத்திக்கு குறைந்த பட்ச அதரவு விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் ஏழாயிரம் (ரூ- 7000 /-) வழங்கிட வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் . நாள் : 03.03.2015 இடம் :பெரம்பலூர் மாவட்டம் (குன்னம் அருகில்) வேப்பூரில் போராட்டம். கட்சியின் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்களின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் எராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
சென்னை
11
Mar
மார்ச் 11 - காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து சென்னையில் மத்திய அரசின் சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் போராட்டம்-(11.3.2015) - மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் இளம்புயல் பண்ருட்டி தி. வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன், தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் தியாகு, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் சுப. உதயகுமார், தமிழ்ப் புலிகள் குடந்தை அரசன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது.. தமிழ வாழ்வுரிமைக் கட்சியினர் உட்பட காவிரி பாதுகாப்பு இயக்கத் தோழர்கள் அணி அணியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பட்டுக்கோட்டை
14
Mar
மார்ச் 14 - காவேரியின் குறுக்கே புதிய அணை ,மீத்தேன் எரிவாயுதிட்டம் ,மீனவர்கள் வாழ்வாதார பிரச்சனைகள் மற்றும் தொடர்ந்து பறிபோகும் தமிழக உரிமைகள். மத்திய அரசை கண்டித்து 14.03.2015 அன்று பட்டுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக நடைபெற்ற பொது கூட்ட புகைப்படங்கள்.
சென்னை
16
Mar
மார்ச் 16 - சென்னை உயர் நீதி மன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி கோரி உயர் நீதிமன்ற முற்றுகை போராட்டம் சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைமையில் நடை பெற்றது.
சென்னை
17
Mar
மார்ச் 17 - தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருகிணைந்து கொள்ளை போகும் வக்பு வாரிய சொத்துக்களை காப்பாற்ற கோரியும் முறைபடுத்த கோரியும் சென்னையில் இன்று 17.03.2015 நடந்த ஆர்ப்பாட்டதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டு பேசிய போது எடுகப்பட்ட புகைப்படங்கள்.
விழுப்புரம்
20
Mar
மார்ச் 20 - காவேரி அற்றின் குறுக்கே மேகதாது ராசிமணல் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாத மத்திய அரசை கண்டித்து விழுப்புரத்தில் 20.03.2015 அன்று ரயிலடியில் நடந்த மாபெரும் பொது கூட்டம் பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சியின் தலைவர் திரு.தி.வேல்முருகன் பேசினார். ''காவிரியின் குறுக்கே அணை கட்ட முயலும் கர்நாடகத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடகம் அணைக் கட்டுவதை தடுக்காமல் மத்திய அரசு மதக் கலவரத்தை தூண்டுகிறது. சுங்கச்சாவடியில் அடிப்படை வசதி கோரி வாழ்வுரிமை கட்சி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் பிற மாநிலங்களை எதிர்த்தும் போராட்டம் நடத்தப்படும்'' என்று வேல்முருகன் பேசினார்.
அரியலூர்
31
Mar
மார்ச் 31 - தனியார் சிமெண்ட் ஆலைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தரிசு நிலங்களையும் ஏரி, குட்டை, சுடுகாடு, புறம்போக்கு நிலங்களான பல ஏக்கர்களை மீட்க கோரியும் ஆண்டுக்கு ஒரு முறை விவசாய நிலங்களுக்கு ராயல்டி தொகை வழங்க கோரியும் ,ஏமாற்றப்பட்ட மக்களுக்கு எக்கருக்கு தலா 20 லட்சம் வழங்ககோரியும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக 31.03.2015 இன்று காலை 10.00 மணிக்கு அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தியூர், ராம்கோ சிமெண்ட் நுழைவாயில் முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் கட்சியின் மாநில பொது செயலாளர் திரு.வை.காவேரி அவர்கள்,கட்சியின் அமைப்பு செயலாளர் திரு.மே.ப.காமராஜ் அவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர் நடைபெற்ற ஆர்ப்பாட்டதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
தர்மபுரி
14
Apr
ஏப்ரல் 14 - காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது ராசிமணல் ஆகிய இடங்களில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் அடாவடித்தனத்தையும் அதனை தடுத்து நிறுத்தாத மத்திய அரசையும் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் இளம்புயல் பண்ருட்டி திரு.தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தில் (14.04.2015 ) மாபெரும் பொது கூட்டம் நடைபெற்றது பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
கடலூர்
18
Apr
ஏப்ரல் 18 - செம்மரம் வெட்டியதாக கூறி 20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை!! செய்த ஆந்திரா காவல்துறையின் கொடூர காட்டுமிராண்டித்தனம்!! கண்டித்தும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது ராசிமணல் ஆகிய இடங்களில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் அடாவடித்தனத்தையும் அதனை தடுத்து நிறுத்தாத மத்திய அரசையும் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக 18.04.2015 சனிக்கிழமை அன்று மாபெரும் பொது கூட்டம், திலீபன் நினைவரங்கம் ,தேரடி வீதி, திருப்பாதிரிப்புலியூர், கடலூரில் நடைபெற்றது கட்சிநிர்வாகிகள் கட்சி தொண்டர்கள், பொது மக்கள் உள்ளிட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
பத்திரிக்கை
01
May
மே 1 - குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழில் வெளிவந்துள்ள செய்திகள்.
பத்திரிக்கை
03
May
மே 3 - ஜூனியர் விகடன் , நக்கீரன் வார இதழ்களில் வெளிவந்துள்ள செய்தி தொகுப்பு.
சென்னை
06
May
மே 6 - நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் சார்பாக "சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துக" என்ற கோரிக்கையை ஐ.நா. சபையின் முன் வைத்து, வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாட்டில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (06-05-2015) நடைபெற்றது அந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் இளம்புயல்,திரு,தி,வேல்முருகன்,அவர்கள் கலந்து கொண்டு முதல் கையெழுத்திட்டு கையெழுத்தியக்கத்தை துவக்கி வைத்தார் அந்நிகழ்வின் பொது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
பாரிஸ்
03
May
மே 14 - பிரான்சில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் உணவு தவிர்ப்பு கவனயீர்ப்பு நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது! பிரான்சில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் உணவு தவிர்ப்பு கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பாரிஸ் Place de la Républiqueஙைரந் பகுதியில் 14.05.2015 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
பத்திரிக்கை
19
May
மே 19 - பிரான்ஸ்சின் தலைநகர் பாரிஸில் முள்ளிவாய்க்கால் 6ம் ஆண்டு நினைவேந்தல் நினைவு கூறப்பட்டது
பாரிஸ்
19
May
மே 19 - பிரான்ஸ்சின் தலைநகர் பாரிஸில் முள்ளிவாய்க்கால் 6ம் ஆண்டு நினைவேந்தல் நினைவு கூறப்பட்டது. சிங்கள தேசம் எமக்கான நீதியை ஒருபோதும் தராது! அது உலக நாடுகளையும் விடாது! வேல்முருகன் சிங்கள தேசம் எமக்கான நீதியைத் ஒருபோதும் தராது அதேநேரத்தில் எமக்கான நீதியை உலக நாடுகள் பெற்றுத் தரவும் அது விடாது என தமிழக வாழ்வுரிகைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தொிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 6ஆம் ஆண்டு நினைவையொட்டி அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுவிஸ்
27
May
மே 27 - தமிழீழ விடுதலை போரட்டத்திற்கு வலு சேர்த்த அனைத்து கலைஞர்களின் நினைவாக தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ்ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்ட போது எடுகப்பட்ட புகைப்படங்கள்.
தஞ்சை
06
Jun
ஜூன் 6 - காவேரி அற்றின் குறுக்கே மேகதாது ராசிமணல் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாத மத்திய அரசை கண்டித்து 06.06.2015 அன்று தஞ்சையில் நடந்த மாபெரும் பொது கூட்டதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
புதுவை
06
July
ஜூலை 6 - புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு, பாராளுமன்றத்தின் முன்பு, ரங்கசாமி உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் கூறினார். பொதுக்கூட்டம் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் புதுச்சேரி மற்றும் தமிழக அரசை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து நேற்று புதுவை வெங்கடசுப்பாரெட்டியார் சிலை அருகில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் நிறுவனர் வேல்முருகன் தலைமை தாங்கி பேசினார்.
திருப்பதி
15
July
ஜூலை 15 - ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் அதிரடிப்படையினரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு கொடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட 20 தமிழர்களின் படுகொலை சம்பவப் தொடர்பாக உண்மை கண்டறியும் குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று ம,தி,மு,க, தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது இதில் ம,தி,மு,க,பொதுசெயலாளர் திரு,வைகோ. தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் பண்ருட்டி திரு,தி.வேல்முருகன்,மனித நேய மக்கள் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் திரு,ஜிவாஹிருல்லா.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு,வீரபாண்டியன்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் திரு,பீமாராவ்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை விளக்க அணி செயலாளர் திரு,பாலசிங்கம். திராவிடர் விடுதலை கழக தலைவர் திரு,கொளத்தூர் மணி.தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த முன்னால் அமைச்சர் ஆனூர் ஜகதிசன் மக்கள் கண்காணிப்பகத்தின் மாநில ஆலோசகர் திரு,ஹென்றி திபேன்.மனித உரிமை ஆர்வலர், வழக்கறிஞர் அணிதா.திரைப்பட இயக்குனர்,திரு,கௌதமன்.ஆகியோர் கலந்து கொண்டனர்.
நெய்வேலி
18
July
ஜூலை 18 - தமிழக வாழ்வுரிமை கட்சியின் பண்ருட்டி நகர நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் இன்று 18.07.2015 மாலை 6.00 மணிக்கு நெய்வேலியில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக திரு.வ.சின்னதுரை மாவட்ட செயலாளர், திரு.கோவிந்தராஜ் மாநில இளைஞர் அணி துணை தலைவர், திரு.கி.பழனிவேல் மாவட்ட துணை தலைவர், திரு.வி.ராஜமுர்த்தி நகர செயலாளர், திரு.ப.செந்தில் நகர தலைவர், திரு.ராஜேஷ்கண்ணா நகர பொருளாளர் உள்ளிட்ட நகர பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் பண்ருட்டி எல்.என்.புரம் பகுதிகளில் இருந்து பல்வேறு கட்சியில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் முன்னிலையில் இணைந்தனர்.
கும்பகோணம்
02
Aug
ஆகஸ்ட் 2 - காவிரி ஆற்றில் கர்நாடக அரசு கழிவு நீர் கலப்பதை கண்டித்து
கும்பகோணதில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கண்டன பொதுகூட்டம் நடைபெற்றது
.நமது தமிழ் நாட்டின் பெருமையை இந்த உலகம் அறியவைத டாக்டர்
அப்துல்கலாம்
மற்றும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று போராடி இறந்த
சசிபெருமாள் அவர்களுக்கும் கும்பகோணத்தில் நடைபெற்ற கண்டன
பொதுகூட்டத்தில்
அஞ்சலி செலுத்திய போது எடுக்கபட்ட புகைப்படங்கள்.
நெய்வேலி
16
Aug
ஆகஸ்ட் 16 - நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் புதிய ஊதிய மாற்று
ஒப்பந்தத்தை உருவாக்க வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள்
நடத்தி
வரும் வேலைநிறுத்தப் போராட்டம் 28வது நாளாக நீடிக்கிறது. தொழிலாளர்கள்
காலவரையற்ற சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளதற்கு
ஆதரவு
தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன்
அவர்கள்
பங்கேற்று பேசிய போது.
திருச்சி
24
Aug
ஆகஸ்ட் 24 - ஈழத் தமிழரை வதைக்கும் சிறப்பு முகாம்களை இழுத்து மூட
வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி
தி.வேல்முருகன்
தலைமையில் திருச்சியில் மாபெரும் முற்றுகைப் போராட்டம்-
பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில்
அடைக்கப்பட்டனர் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
திருச்சி
25
Aug
ஆகஸ்ட் 25 - இலங்கைத் தமிழர்களை விடுக்க கோரி திருச்சி சிறையை
முற்றுகையிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அப்போது தி.வேல்முருகன்
செய்தியாளர்களிடம் கூறும் போது, “இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது,
ஏராளமான தமிழர்கள் இங்கு தப்பிவந்தனர். அவர்களில் பலரை முகாம்
சிறைகளில்
அடைத்து வைத்துள்ளனர். இவர்களை விடுவித்து, விரும்பும் நாடுகளுக்கு
அனுப்பி
வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக
முதல்வரை
விரைவில் சந்தித்து இதுபற்றி வலியுறுத்த உள்ளேன்” என்றார். இந்தியன்
எக்ஸ்பிரஸ் , தினமணி தமிழ் நாளிதழில் வெளிவந்துள்ள செய்திகள்.
சென்னை
27
Aug
ஆகஸ்ட் 27 - மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் சென்னை,
பாலவாக்கத்தில் நடைபெற்ற மரண தண்டனைக்கு எதிராக தன்னுயிர் நீத்த
தோழர்,செங்கொடி நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக்
கட்சித்
தலைவர்,தி,வேல்முருகன்.அவர்கள் கலந்து கொண்டார் அப்பொழுது எடுக்கப்பட்ட
புகைப்படங்கள்.
நெல்லை
30
Aug
ஆகஸ்ட் 30 - தமிழக வாழ்வுரிமை கட்சியின் தென்மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடைபெற்றது குறித்து தினத்தந்தி, தினகரன் ,மாலைமுரசு ,இந்தியன் எக்ஸ்பிரஸ் , ஹிந்து தமிழ் நாளிதழில் வெளிவந்துள்ள செய்திகள்.
சென்னை,அடையார்
31
Aug
ஆகஸ்ட் 31 - சர்வதேச காணமல் போனவர்கள் நாளை ஒட்டி தமிழ் ஈழத்தில்
போரின்போதும் அதற்க்கு பின்னரும் சிங்கள அரசால் திட்டமிட்டு காணாமல்
அடிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து தரக்கோரி சென்னை அடையாரில் உள்ள
ஐ.நா,அலுவலகத்தின் அருகில் இன்று (31-8-2015) தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு ஆயிரக்கணக்கனோர் கலந்து கொண்ட
ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்
திரு,தி.வேல்முருகன், திராவிடர் விடுதலை கழக தலைவர் திரு.கொளத்தூர்
மணி,
தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தலைவர் திரு.தியாகு ஆகியோர் கலந்து
கொண்டனர்.
முன்னதாக இக்கோரிக்கையை வலியுறுத்தி ஐ.நா. அலுவலகத்தில் மனு
அளிக்கப்பட்டது.
பத்திரிக்கை
17
Sep
செப்டம்பர் 17 - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை இன்றைய தினத்தந்தி,தினமணி,தமிழ் ஹிந்து,இந்தியன் எக்ஸ்பிரஸ்,ஆகிய நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது.
தருமபுரி
21
Sep
செப்டம்பர் 21 - இலங்கையில் தமிழினத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்துக என்பது உள்ளிட்ட தமிழக சட்டமன்ற தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ரயில் மறியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக தருமபுரி தொடர்வண்டி நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் தலைமையிலான தொடர் வண்டி மறியல் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கனோர் கலந்து கொண்டு கைதாயினர்.
பெரியப்பட்டு
25
Sep
செப்டம்பர் 25 - கடலூர் சிப்காட் விரிவாக்கம்-3 (பெரியப்பட்டு) சைமா சாய ஆலைகள் தொடங்கும் பணிகளை தடுத்து நிறுத்திட மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக நடைபெற்ற இந்த மாபெரும் முற்றுகைப் போராட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
செப்டம்பர்
25
Sep
செப்டம்பர் 25 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் மாபெரும் ரயில் மறியல் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடை பெற்றது குறித்து குமுதம் ரிப்போர்ட்டர்,நக்கீரன் ஆகிய நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை
25
Sep
செப்டம்பர் 27 - சென்னையில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்திய திலீபன் நினைவுநாள் கருத்தரங்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டார்.
புதுக்கோட்டை
06
Sep
அக்டோபர் 6 - தமிழக வாழ்வுரிமை கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் ஆய்வு கூட்டம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
திருநெல்வேலி
28
Oct
அக்டோபர் 28 - வேல்முருகன் கட்சியின் மீது தடியடி
தென்னாப்ரிக்கா
07
Nov
நவம்பர் 7 - இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை உள்ளிட்ட ஈழத்தமிழிழர்கள் எதிர்க்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் குறித்தும் அதற்க்கான தீர்வுகள் குறித்தும் விவாதிப்பதற்காக தென்னாப்ரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்றுவரும் சர்வதேச நாடுகளின் தமிழர் பிரதிநிதிகளின் மாநாட்டின் இரண்டம் நாள் அமர்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி.தி.வேல்முருகன்.அவர்கள் கலந்து கொண்டார் இம்மாநாட்டின் இன்றைய அமர்வில் முன்னாள் ஐ.நா,மனித உரிமைகள் ஆணையர் திருமதி.நவநீதம்பிள்ளை. தென்னாப்ரிக்காவின் டைரக்டர் ஜெனரல்.தென்னாப்ரிக்காவின் மேயர்.இலங்கைக்கான தென்னாப்ரிக்காவின் தூதர்.உள்ளிட்ட 30க்கும் மேற்ப்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பத்திரிக்கை
21
Nov
நவம்பர் 21 - குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழில் 21.11.2015 இன்று வெளிவந்துள்ள செய்தி தொகுப்பு.
கடலூர்
27
Nov
நவம்பர் 27 - தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் கனமழையால் கடலூர் மாவட்டம் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்து குறித்தும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த வார ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த நேர்க்காணல் கடலூரில் குடிசை வீடுகளே இருக்கக் கூடாது! வேல்முருகன் யோசனை.
தமிழர் படை போராளிகள்
05
Dec
டிசம்பர் 5 - கிராமங்களுக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தமிழர்படை போராளிகள் கட்சியின் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் ஆணைகிணங்க வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், தண்ணீரை வெளியேற்ற சாலைக்ககு குறுக்கே, கீழ் உள்ள குழாய் அடைப்புகளை எடுக்க தண்ணீரில் மூழ்கி பணியாற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தமிழர் படை போராளிகள்.
நிவாரண உதவிகள்
09
Dec
டிசம்பர் 9 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தலைவர் திரு தி.வேல்முருகன் அவர்கள் இன்று 9.12.2015 பாதிப்பு பகுதிக்கு சென்று ஆறுதல் கூறுவதோடு மட்டுமில்லாமல் நிவாரண உதவிகளையும் வழங்கிய போது எடுகப்பட்ட புகைப்படங்கள்.
ஹேமந்த்குமாருக்கு வீரவணக்கம்
11
Dec
டிசம்பர் 11 - ஐ.சி.எப்.-ல் வேலை கோரி தம்முயிரை மாய்த்த பயிற்சி மாணவர் ஹேமந்த்குமாருக்கு வீரவணக்கம்!
அரசுக்கு வேண்டுகோள்
15
Dec
டிசம்பர் 15 - பெரும் மழை வெள்ளத்தால் அனைத்தயும் வாரி சுருட்டிச் சென்றுவிட்ட நிலையில் , யாரும் கண்டுகொள்ளாத நிலையில் நிர்கதியாக நிற்கின்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மனிதநேயதுடன் இன்று (15-12-2015) தலைவர் அண்ணன் பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்து நிவார்ன பொருட்களை வழங்கினர். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களை மாநில அரசு போர்க்கால அடிப்படையில் உடனே வழங்கிட வேண்டும்; அவர்கள் தொழில்கள் தொடங்குவதற்கான வட்டியில்லா கடனை உடனே வழங்கிடவும் வீடிழந்தோருக்கு முன்னுரிமை அளித்து வீடுகளை கட்டித் தந்திடவும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாள் : 15-12-2015.
ரெட்டிபாளையம்
22
Dec
டிசம்பர் 22 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள்,, மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட விசூர்,ரெட்டிபாளையம் ஆதிதிராவிடர் மக்களுக்கும், மற்றும் நன்னிகுப்பம், மக்களுக்கும் நிவாரண பொருட்களை வழங்குவதற்காக நேற்று இரவு 11.00 மணிக்கு வாகனங்களில் அனுப்பி வைத்து, இன்று (22.12.2015) மாலை 3.30 மணி அளவில் அவர்கள் இடத்திற்கு சென்று நிவாரண பொருட்களை வழங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
மாற்றுதிறனாளி அவர்களுக்கு தேவையான பொருட்களை
23
Dec
டிசம்பர் 23 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள்,, மாற்றுதிறனாளி குழந்தைகளின் காப்பகத்திற்கு சென்று அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்..
சென்னை
24
Dec
டிசம்பர் 24 - தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சார்பாக சென்னையில் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த மீலாது நபி திருநாள் பேரணியை தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் துவக்கி வைத்தார்.
பெரியாங்குப்பம்
28
Dec
டிசம்பர் 28 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் நேற்று (28.12.2015), மாலை : 3.00 மணி அளவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பேர் பெரியாங்குப்பம் பகுதி ஆதிதிராவிடர் மக்களுக்கு ஆறுதல் கூறி,நிவாரண உதவிகளை வழங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
கீழ்க்குப்பம்
30
Dec
டிசம்பர் 30 - மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கீழ்க்குப்பம் பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறி,நிவாரண உதவிகளைவழங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்......
காப்பாங்குளம்
30
Dec
டிசம்பர் 30 - அவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய காப்பாங்குளம் பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறி,நிவாரண உதவிகளை வழங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்..