ஜனவரி 2 - தமிழ்கடல் அய்யா திரு.நெல்லை கண்ணன் அவர்கள் கைது
செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்து விவாதிக்க தமிழர் வாழ்வுரிமைக்
கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.
இராஜபாளையம்
03
Jan
ஜனவரி 3 - இராஜபாளையம் வட்டார அனைத்து ஜமாஅத்,மற்றும் அனைத்து இஸ்லாமிய
இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டம்
மற்றும் NRC-ஐ கண்டித்து விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் (03-01-2020)
மாலை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
தேனி ,கம்பம்
07
Jan
ஜனவரி 7 - அநீதிக்கு எதிரான இயக்கம் சார்பில் (07-01-2020) மாலை தேனி
மாவட்டம், கம்பம் நகரில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டம் அறிதலரங்கம்
நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார்.
கடலூர்
10
Jan
ஜனவரி 10 - குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கடலூர்
ஒருங்கிணைந்த ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் கடலூரில் நடைபெற்ற கண்டன
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
சென்னை
11
Jan
ஜனவரி 11 - சென்னை அம்பத்தூரில் இயங்கிவரும் தாய்தமிழ் மழலையர் பள்ளியில்
இன்று நடைபெற்ற தமிழ் புத்தாண்டு,பொங்கல் திருநாள் விழா மற்றும்
குழந்தைகளின் கலைவிழா நிகழ்வில் பங்கேற்றார்.
நெல்லை
12
Jan
ஜனவரி 12 - நெல்லை மாநகர் மற்றும் புறநகர் அனைத்து ஜமாத் மற்றும் உலமாக்கள்
ஒருங்கிணைப்பில் நேற்று (12-01-2020) மாலை குடியுரிமை திருத்தச் சட்டத்தைக்
கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கண்டன
உரையாற்றினார்.
நெல்லை
18
Jan
ஜனவரி 18 - குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மனிதநேய
ஜனநாயக கட்சி சார்பில் நேற்று(18-01- 2020) சிவகங்கை மாவட்டம்
இளையான்குடியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று
உரையாற்றினார்.
வேலூர்
19
Jan
ஜனவரி 19 - மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நேற்று (19-01-2020) மாலை
வேலூரில் நடைபெற்ற CAA NRC NPR எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்று கண்டன
உரையாற்றினார்.
அருப்புக்கோட்டை
21
Jan
ஜனவரி 21 - முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் கொலை வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டு 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும்
திரு.ரவிச்சந்திரன். அவர்கள் தற்போது 15 நாள் பரோலில்
விடுவிக்கப்பட்டுள்ளார், அவரை அருப்புக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில்
சந்தித்தார்.
மதுரை
22
Jan
ஜனவரி 22 - CAA,NRC,NPR, ஆகிய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அகில
இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் (22-01-2020) மதுரையில் நடைபெற்ற கண்டன
பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
தஞ்சை
23
Jan
ஜனவரி 23 - தஞ்சை மாவட்டம் மல்லிபட்டிணத்தில் அனைத்து ஜமா அத் கூட்டமைப்பு
சார்பில் (23-01-2020) நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான
கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
திருவாரூர்
24
Feb
ஜனவரி 24 - திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அனைத்து ஜமா அத்
கூட்டமைப்பு மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று
நடைபெற்ற CAA,NRC,NPR எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
பத்திரிக்கை
25
Jan
ஜனவரி 25 - தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தாவிட்டால்
இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
ஹைட்ரோகார்பன், குடியுரிமை சட்ட பிரச்னையை திசை திருப்பவே ரஜினி பெரியார்
பற்றி பேசுகிறார்.- தினத்தந்தி, தினமணி, தினகரன் ஆகிய நாளிதழ்களில்
வெளியிடப்பட்டுள்ள செய்திகள்.
திருப்பூர்
26
Jan
ஜனவரி 26 - ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் இன்று திருப்பூரில் நடைபெற்ற
இந்திய தேசம் காத்த இஸ்லாமியர்களின் நினைவு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று
உரையாற்றினார்.
தூத்துக்குடி
29
Jan
ஜனவரி 29 - குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக
(29-01-2020) தூத்துக்குடியில் நடைபெற்ற CAA,NRC,NPR ஐ திரும்பப் பெற
வலியுறுத்தி நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கண்டன
உரையாற்றினார்.
தூத்துக்குடி
31
Jan
ஜனவரி 31 - அனைத்து ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை சட்டத்
திருத்தத்தைக் கண்டித்து (31-01-2020) பண்ருட்டியில் நடைபெற்ற கண்டன
பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
கடலூர்
02
Feb
பிப்ரவரி 2 - இனரீதியாக, மதரீதியாக, இந்தியாவை பிளவுபடுத்தும் தேசிய
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கடலூர் மாவட்டம், எள்ளேரியில்
இஸ்லாமிய இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்
பங்கேற்று உரையாற்றினார்.
கடலூர்
06
Feb
பிப்ரவரி 6 - கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் திராவிடர் கழகம்
சார்பில் நடைபெற்ற கருஞ்சட்டை பேரணியில் பங்கேற்று உரையாற்றினார்.
வேலூர்
07
Feb
பிப்ரவரி 7 - இந்திய தவ்ஹீத் ஜமா அத் சார்பில் வேலூர் மாவட்டம்
பேர்ணாம்பட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
தர்மபுரி
08
Feb
பிப்ரவரி 8 - தர்மபுரியில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்
நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில்
பங்கேற்றார்.
உடுமலை
09
Feb
பிப்ரவரி 9 - உடுமலை,மடத்துக்குளம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை,அனைத்து
பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு
சார்பில் (09-02-2020) மாலை உடுமலைப்பேட்டையில் இந்திய குடியுரிமை திருத்த
சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று
கண்டன உரையாற்றினார்.
புதுக்கோட்டை
10
Feb
பிப்ரவரி 10 - CAA,NRC,NPR, போன்ற மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை
கைவிடக்கோரி நேற்று(10-02-2020) புதுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன
பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
சிதம்பரம்
12
Feb
பிப்ரவரி 12 - சிதம்பரம் மற்றும் புவனகிரி வட்டார அனைத்து ஜமாஅத்
கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து புவனகியில்
நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
திருச்சி
14
Feb
பிப்ரவரி 14 - திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் நேற்று
(14-02-2020) திருச்சியில், உழவர் சந்தை அருகே அரசியலமைப்புச் சட்டம்
மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்திட வலியுறுத்தி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்
பங்கேற்று உரையாற்றினார்.
வண்ணாரப்பேட்டை
15
Feb
பிப்ரவரி 15 - சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று காவல்துறையிரால்
நடத்தப்பட்ட தடியடி சம்பவத்தை கண்டித்து திருவாரூர்
மாவட்டம்,கூத்தாநல்லூரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன
உரையாற்றினார்.
கும்பகோணம், சோழபுரம்
16
Feb
பிப்ரவரி 16 - குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து கும்பகோணம் அருகே
உள்ள சோழபுரத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று
உரையாற்றினார்.
சேப்பாக்கம்
17
Feb
பிப்ரவரி 17 - ஃபாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் சேப்பாக்கம்,
நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும் செய்தியாளர்கள்
சந்திப்பில் தலைவர் பங்கேற்றார்.
சென்னை ,பழைய வண்ணாரப்பேட்டை
18
Feb
பிப்ரவரி 18 - சென்னை,பழைய வண்ணாரப் பேட்டையில் குடியுரிமை திருத்த
சட்டத்துக்கு எதிராக ஐந்தாவது நாளாக இஸ்லாமிய சகோதரிகளால்
முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டத்தில் பங்கேற்று கண்டன
உரையாற்றினார்.
குடியுரிமை திருத்த சட்டம்
19
Feb
பிப்ரவரி 19 - குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய
இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற
முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
விழுப்புரம்
20
Feb
பிப்ரவரி 20 - விழுப்புரத்தில் தமுமுக சார்பில் நடைபெற்ற குடியுரிமை
திருத்தச் சட்ட எதிர்ப்பு கருத்தரங்கத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
பெரியார் திடலில்
22
Feb
பிப்ரவரி 22 - (22-02-2020) பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடம் 2.0
நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார்.
நாகூர்
23
Feb
பிப்ரவரி 23 - CAA,NCR, NPR, சட்டங்களை எதிர்த்து நாகூர் மக்கள்
கூட்டமைப்பு சார்பில் மாலை நாகூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில்
பங்கேற்று உரையாற்றினார்.
சீர்காழி
29
Feb
பிப்ரவரி 29 - குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மனிதநேய
மக்கள் கட்சி சார்பில் சீர்காழியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று
உரையாற்றினார்.
திருச்சி
01
March
மார்ச் 1 - CAA-NRC-NPR, குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற
வலியுறுத்தி திருச்சி வரகநேரி இளைஞர்கள் பொது நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற
கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
வள்ளுவர் கோட்டத்தில்
03
March
மார்ச் 3 - டெல்லியில் அப்பாவி இஸ்லாமிய மக்கள் மீது ஏவிவிடப்பட்ட வன்முறை
வெறியாட்டம், 40 க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மனிதநேய மக்கள்
கட்சி தலைவர் பேராசிரியர் திரு ஜவாஹிருல்லா.அவர்கள். SDPI கட்சியின் தேசிய
துணை தலைவர் திரு.தெகலான் பாகவி.அவர்கள். கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர்
திரு.இனிகோ இருதயராஜ். அவர்கள். ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
திருவண்ணாமலை
05
March
மார்ச் 5 - CAA,NRC,NPR குடியுரிமை சட்டங்களை எதிர்த்து (05-03-2020)
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று
கண்டன உரையாற்றினார்.
தென்காசி
06
March
மார்ச் 6 - தென்காசி மாவட்டம், புளியங்குடியில் இந்திய மக்களின்
குடியுரிமையை பறிக்கும் CAA,NRC,NPR போன்ற பாசிச பயங்கரவாத சட்டங்களை
எதிர்த்து நடைபெற்ற தேசம் காப்போம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கண்டன
உரையாற்றினேன்.
சென்னை, மயிலாப்பூர்
12
March
மார்ச் 12 - சென்னை மயிலாப்பூரில் 7வது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் மாலை பங்கேற்று
உரையாற்றினார்மார்ச் 12 - சென்னை மயிலாப்பூரில் 7வது நாளாக நடைபெற்றுக்
கொண்டிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில்
மாலை பங்கேற்று உரையாற்றினார்.
தூத்துக்குடி
13
March
மார்ச் 13 - தூத்துக்குடி மாநகர ஜமாத்துல் உலமாக்கள் சார்பில் நேற்று
(13-03-2020) தூத்துக்குடியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு
எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
கடலூர்
15
March
மார்ச் 15 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொதுக்குழு
கூட்டம் (15-03-2020) நடைபெற்றது.
திருச்சி, லால்குடி
19
March
மார்ச் 19 - லால்குடி வட்டார ஜமாத்துல் உலமா சபை, அனைத்து இயக்கங்கள்,
கட்சிகள், மற்றும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை இணைந்து CAA,NRC,NPR
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நேற்று
(19-03-2020) திருச்சி லால்குடியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில்
பங்கேற்று கண்டண உரையாற்றினார்.
தலைவர் தனது வீட்டின்முன்
07
May
மே 7 - காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்தை பறித்து அதனை
மத்திய நீர்வளத்துறையுடன் இணைக்கும் இந்திய அரசின் தமிழர் விரோத போக்கை
கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தமிழகம் முழுவதும் மாலை
அவரவர் வீட்டின் முன்பாக நின்று காவிரி உரிமைக்காக முழக்கமிடும் போராட்டம்
நடைபெற்றது,போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக வாழ்வுரிமைக்
கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்,அப்போராட்டத்தின்
ஒரு பகுதியாக தலைவர் தனது வீட்டின் முன்பாக நின்று போராட்டத்தில் பங்கேற்று
காவிரி உரிமைக்காக குரல் எழுப்பினார்.
பத்திரிக்கை
13
May
மே 13 - மோடி அரசின் மின்சார சட்டத் திருத்தம் ! மாநிலங்களின் உரிமைகளை
பறிக்கும் மத்திய அரசு ! - நக்கீரன் வார இதழ் செய்திகளின் தொகுப்பு.
நெய்வேலி
18
May
மே 18 - தமிழீழத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது வீரச்சாவடைந்த
போராளிகளுக்கும்,பொதுமக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு மாலை 6
மணியளவில் தமிழகம் முழுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள்
சார்பில் முன்னெடுக்கப்பட்டது, அதன் ஒரு பகுதியாக நெய்வேலியில் தலைவர்
இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் நினைவேந்தல் சுடரேற்றி வீரவணக்கம்
செலுத்தினார்.
நெய்வேலி
05
July
ஜூலை 5 - வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கவும் அயல்நாடுகளில்
அல்லல்படும் தமிழர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை
எடுக்கக்கோரியும், வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன் காக்க தனி நலவாரியமும்,
தனி அமைச்சகமும் உடனே அமைத்திட வேண்டியும். தமிழகம் முழுவதும் தமிழக
வாழ்வுரிமை கட்சியால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக
நெய்வேலியில் உள்ள எனது இல்லத்தில் பதாகையேந்தி தலைவர் தலைமையில் போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.
சேலம்
30
July
ஜூலை 30 - சேலம் மேற்கு மாவட்டம், மேட்டூர் தொகுதியை உள்ளடக்கிய மேச்சேரி
நகரம், மற்றும் ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்த 150 க்கும் மேற்ப்பட்டோர்
மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கையை
ஏற்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர் வெளிநாடு வாழ் தமிழர்களின்
நலன் காக்கவும் அயல்நாடுகளில் அல்லல்படும் தமிழர்களை உடனடியாக
தமிழ்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கக்கோரியும், வெளிநாடுவாழ்
தமிழர்களின் நலன் காக்க தனி நலவாரியமும், தனி அமைச்சகமும் உடனே அமைத்திட
வேண்டியும். தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமை கட்சியால்
முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக நெய்வேலியில் உள்ள
எனது இல்லத்தில் பதாகையேந்தி தலைவர் தலைமையில் போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.
பண்ருட்டி
04
Aug
ஆகஸ்ட் 4 - பண்ருட்டி நகர வன்னியர் சங்க தலைவர் திரு. சாந்தகுமார்
அவர்களின் தலைமையில் பண்ருட்டி நகர பகுதியைச் சேர்ந்த 25-க்கும்
மேற்பட்டோர் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகி
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்களின்
தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். தமிழக வாழ்வுரிமைக்கான
பயணத்தில் எம்மோடு இணைந்த அவர்கள் அனைவரையும் வருக! வருக!! என
வரவேற்கிறோம்.
இணையவழி
07
Aug
ஆகஸ்ட் 7 - ஒபிசி மக்களை உயர்த்திட பாடுபட்ட இட ஒதுக்கீடு நாயகன் மண்டல்
தினத்தை போற்றுவோம் என்ற தலைப்பில் அகில இந்திய ஒபிசி ஒருங்கிணைப்புக் குழு
சார்பில் இன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரையில் நடைபெற்ற இணையவழியிலான
கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று திரு.பி.பி.மண்டல். அவர்கள் குறித்தும்,
திரு.வி.பி.சிங் அவர்கள் குறித்தும், மண்டல் கமிஷன் குறித்தும்
கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
சென்னை
16
Aug
ஆகஸ்ட் 16 - தமிழகத்தின் அரசு மற்றும் தனியார் துறையின் வேலைவாய்ப்புகளில்
வட இந்தியரின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழகத்தின் மண்ணின்
மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை
இயற்ற வலியுறுத்தியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழகம்
முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் நிர்வாகிகள் அவரவர்கள்
இல்லத்தின் முன்பாக கோரிக்கை முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில்
ஈடுபட்டனர்,அதன் ஒரு பகுதியாக நான் சென்னையில் உள்ள எனது இல்லத்தின்
முன்பாக சமூக இடைவெளியுடன் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார்.
கடலூர்
25
Aug
ஆகஸ்ட் 25 - கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகரத்தைச் சேர்ந்த 100 க்கும்
மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி எனது தலைமையில் தமிழக
வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். தமிழக வாழ்வுரிமை
மீட்ப்புக்கானபயணத்தில் எங்களோடு இணைந்த அவர்கள் அனைவரையும் வருக! வருக!!
என வரவேற்கிறோம்.
கடலூர்
26
Aug
ஆகஸ்ட் 26 - கடலூர் மாவட்டம், நெய்வேலி நகரத்தைச் சேர்ந்த சுமார் 50 க்கும்
மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி எனது தலைமையில் தமிழக
வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். தமிழக வாழ்வுரிமை
மீட்ப்புக்கானபயணத்தில் எங்களோடு இணைந்த அவர்கள் அனைவரையும் வருக! வருக!!
என வரவேற்கிறோம்.
கள்ளக்குறிச்சி
30
Aug
ஆகஸ்ட் 30 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்ப்பட்டோர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்களின்
தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். தமிழக வாழ்வுரிமைக்கான
பயணத்தில் எங்களோடு இணைந்த அவர்கள் அனைவரையும் வருக! வருக!! என
வரவேற்கிறோம்.
நெய்வேலி
06
Jan
ஜனவரி 6 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்
06-01-2019 அன்று நெய்வேலியில் நடைபெற்றது.
சென்னை
11
Jan
ஜனவரி 11 - (11.01.2019) சென்னை புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற ஐயா
பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் ஏழு நூல்கள் மற்றும் தோழர் பொழிலன்
அவர்களின் ஒரு நூல் ஆகியவற்றின் வெளியீட்டு விழாவில் பங்கேற்று நூல்களை
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்டார்.
பத்திரிக்கை
21
Jan
ஜனவரி 21 - என்எ.சிக்கு எதிராக பொங்கும் வேல்முருகன் - அதிரடி குரல் -
அதிரடி குரல் - தமிழ்மாத இதழில் வெளிவந்துள்ள செய்திகள்
தூத்துக்குடி
22
Jan
ஜனவரி 22 - தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500 க்கும்
மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி தலைவரின் தலைமையில் தமிழக
வாழ்வுரிமைக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தேனி, கம்பம்
28
Jan
ஜனவரி 28 - போராளி திரு, பழனிபாபா. அவர்களின் நினைவு நாளான இன்று இந்திய
தேசிய லீக் கட்சி சார்பில் தேனி மாவட்டம், கம்பம் நகரத்தில்
ஒருங்கிணைக்கப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
சென்னை
03
Feb
பிப்ரவரி 3 - "தன்னாட்சி தமிழகம்" சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு இன்று
சென்னையில் நடைபெற்ற "தன்னாட்சி மாநாட்டில்" தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சார்பில் பங்கேற்று உரையாற்றினேன்.
ஈரோடு
04
Feb
பிப்ரவரி 4 - ஈரோட்டில் இன்று நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் 11 ஆம்
ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
சேலம்
05
Feb
பிப்ரவரி 5 - தமிழகத்தில் அரசு, மற்றும் தனியார் துறையின் வேலை வாய்ப்புகள்
அனைத்திலும் தமிழர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய மண்ணின் மைந்தர்களுக்கு
"வேலை வாய்ப்பு உறுதிச் சட்டம்" இயற்ற வலியுறுத்தி பிப்ரவரி 28 ந் தேதி,
சென்னையில் நடைபெற உள்ள பேரணி குறித்தும் அதில் சேலம் கிழக்கு மாவட்டம்,
மற்றும் சேலம் தெற்கு மாவட்டம், சார்பில் திரளாக கலந்து கொள்வது குறித்தும்
தலைவர் தலைமையில் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது.
பத்திரிக்கை
08
Feb
பிப்ரவரி 8 - தமிழகத்தில் அரசு, மற்றும் தனியார் துறையின் வேலை வாய்ப்புகள்
அனைத்திலும் தமிழர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய மண்ணின் மைந்தர்களுக்கு
"வேலை வாய்ப்பு உறுதிச் சட்டம்" இயற்ற வலியுறுத்தி வருகின்ற பிப்ரவரி 28 ந்
தேதி, சென்னையில் மாபெரும் கோரிக்கை பேரணி. தினத்தந்தி.தினமணி.தினகரன்.
காலை கதிர்.தமிழ் ஹிந்து.ஆகிய நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள்
அரியலூர்
21
Feb
பிப்ரவரி 21 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இன்று அரியலூர்
மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்தொழிக்கும் சிமெண்ட் ஆலைகளை
கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பத்திரிக்கை
23
Feb
பிப்ரவரி 23 - தமிழகத்தின் அரசு மற்றும் தனியார் துறைகளின் வேலை
வாய்ப்புகளில் 90% தமிழர்களுக்கே சிறப்பு சட்டம் இயற்றக் கோரி கோட்டை
நோக்கி மாபெரும் கோரிக்கை பேரணி நாள் - 28 - 2 - 2019, நேரம் - மாலை 3 மணி,
பேரணி துவங்கும் இடம்- ராஜரத்தினம் மைதானம். நன்றி - தினத்தந்தி.தினமணி.
தினகரன். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ள
செய்திகள்.
சென்னை
25
Feb
பிப்ரவரி 25 - காணாமல் போன சூழலியல் போராளி தோழர் முகிலன் அவர்களை
கண்டுபிடிப்பதற்க்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தக்கோரி அரசை வலியுறுத்தும்
வகையில் இன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில், நடைபெற்ற தோழர் முகிலன் எங்கே
ஆலோசனை கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பங்கேற்று எனது
கருத்துக்களை முன்வைத்தேன், முடிவில் பங்கேற்ற அனைத்து கட்சிகள், மற்றும்
இயக்கங்கள் ஒருங்கிணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 2ம் தேதியன்று
சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சென்னை
28
Feb
பிப்ரவரி 28 - வடநாட்டவர்களின் வேட்டைக்காடாகும் தமிழகம், பறிபோகும்
தமிழர்களின் வேலை வாய்ப்புகள், மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்பை உறுதி
செய்ய வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக்
கட்சி சார்பில் இன்று சென்னையில் மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை தமிழர் தேசிய முன்னணி தலைவர் ஐயா பழ, நெடுமாறன். அவர்கள்
துவக்கி வைத்தார், மேலும் தமிழ் தேசிய பேரியக்கம் தலைவர் ஐயா,மணியரசன்.
அவர்கள் மற்றும் தமிழர் கொற்றம் அமைப்பின் தலைவர் திரு,வியனரசு. அவர்கள்
ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
பத்திரிக்கை
01
March
மார்ச் 1 - வடநாட்டவர்களின் வேட்டைக்காடாகும் தமிழகம், பறிபோகும்
தமிழர்களின் வேலை வாய்ப்புகள், மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்பை உறுதி
செய்ய "வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம்" இயற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக்
கட்சி சார்பில் நேற்று சென்னையில் மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெற்றது.
தினத்தந்தி. தமிழ் ஹிந்து.தினமணி.டைம்ஸ் ஆப் இந்தியா.ஆகிய நாளிதழ்களில்
வெளியிடப்பட்டுள்ள செய்திகள்.
சென்னை
02
March
மார்ச் 2 - காணாமல் போன சூழலியல் போராளி தோழர் முகிலனை கண்டுபிடித்து
தரக்கோரி சென்னை சேப்பாக்கத்தில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில்
ஒருங்கிணைக்கப்பட்டு அய்யா நல்லக்கண்ணு அவர்கள் தலைமையில் நடைபெற்ற
ஆர்ப்பாட்ட்த்தில் பங்கேற்று கண்டண உரையாற்றினேன்.
தென்னக தொடர்வண்டி துறை
06
March
மார்ச் 6 - தென்னக தொடர்வண்டி துறையில் தொடர்ச்சியாக சட்டத்துக்கு புறம்பான
முறையில் தமிழர்களை புறக்கணித்து முறைகேடான வழிகளில் வடநாட்டவர்களை
பணியிலமர்த்தும் போக்கு தொடர்வதைக் கண்டித்தும், இந்த மாதம் 4ம் தேதி
வெளியான தேர்வு முடிவுகளில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது
கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து இத்துறையில் தமிழர்கள்
புறக்கணிக்கப்படுவது குறித்தும்,நிலவும் முறைகேடுகள் குறித்தும் உரிய
விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுத்திட உத்தரவிட வேண்டுமென்றும்
வலியுறுத்தி தென்னக தொடர்வண்டி துறை பொது மேலாளர் அவர்களை சந்தித்து தமிழக
வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மனு அளித்தோம்.
சென்னை
09
March
மார்ச் 9 - ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில்
நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம்.
மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம்
10
March
மார்ச் 10 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு
கூட்டத்தில் (10.03.2019)நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாடாளுமன்றத்
தேர்தல்-2019இல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு மற்றும்
செயல்பாடுகள் குறித்து விவாதிக்கும் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம்.
சென்னை
22
March
மார்ச் 22 - தொடர்வண்டி பணியாளர் தேர்வுக் குழுவின் (RRB) தேர்வு மற்றும்
பணி நியமனங்களில் தொடரும் தமிழர் விரோத போக்கை கண்டித்து முதல் கட்டமாக
சென்னை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தொடர்வண்டி பணியாளர்
தேர்வுக் குழுவின் (RRB) உடல்தகுதி தேர்வு நடைபெறும் ஆவடியில் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
சென்னை
02
Apr
ஏப்ரல் 2 - மறைந்த இயக்குனர் திரு.மகேந்திரன். அவர்களின் உடலுக்கு நேரில்
சென்று அஞ்சலி செலுத்தினார் இயக்குநர் திரு.மகேந்திரன். அவர்களின் இழப்பு
தமிழினத்திற்கே பேரிழப்பு. அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கிறது தமிழக
வாழ்வுரிமைக் கட்சி! அவரது இழப்பால் துயருறும் அவர் மகன் ஜான்
மகேந்திரன்,குடும்பத்தினர், மற்றும் அவரது உற்றார் உறவினர்களுக்கு தமிழக
வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
கோவை
03
Apr
ஏப்ரல் 3 - கோவை துடியலூரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு
படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரிதன்யாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து
ஆறுதல் கூறி,தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஒரு லட்சம் ரூபாயை
உதவித்தொகையாக வழங்கினேன்.
கடலூர்
05
Apr
ஏப்ரல் 5 - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கடலூர் நாடாளுமன்ற
தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு.TRV.ரமேஷ். அவர்களை
ஆதரித்து, இன்று கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நடைபெற்ற பரப்புரை
பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
கடலூர்
06
Apr
ஏப்ரல் 6 - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கடலூர் நாடாளுமன்ற
தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு.TRV.ரமேஷ். அவர்களை
ஆதரித்து, நேற்று கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடைபெற்ற பரப்புரை
பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
விழுப்புரம்
07
Apr
ஏப்ரல் 7 - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விழுப்புரம் நாடாளுமன்ற
தொகுதியின் விடுதலைச் சிறுத்கைகள் கட்சியின் வேட்பாளர்,
திரு.துரை.ரவிக்குமார். அவர்களை ஆதரித்து, நேற்று(07 - 04- 2019)
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று
உரையாற்றினார்.
கள்ளக்குறிச்சி
08
Apr
ஏப்ரல் 8 - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற
தொகுதியின் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்,மருத்துவர்,திரு.பொன்.கவுதம
சிகாமணி.அவர்களை ஆதரித்து, இன்று(08 - 04- 2019) சின்ன சேலத்தில் நடைபெற்ற
பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
சென்னை
11
Apr
ஏப்ரல் 11 - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருப்பெரும்பதூர்
நாடாளுமன்ற தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்,திரு,டி ஆர்,
பாலு.அவர்களை ஆதரித்து, நேற்று(11 - 04- 2019) சென்னை கொரட்டூரில் நடைபெற்ற
பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
திருவள்ளூர்
12
Apr
ஏப்ரல் 12 - சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள பூந்தமல்லி தனித்
தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக
வேட்பாளர் திரு. கிருஷ்ணசாமி. அவர்களை ஆதரித்து நேற்று (12-04-2019)
திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் கூட்டுரோட்டில் நடைபெற்ற தேர்தல்
பரப்புரை பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
சைதாப்பேட்டை
13
Apr
ஏப்ரல் 13 - தென்சென்னை நாடாளுமன்ற தெகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு
கூட்டணி சார்பில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்
திருமதி,தமிழச்சி தங்கபாண்டியன். அவர்களை ஆதரித்து சைதாப்பேட்டையில்
நேற்று(13-04-2019) நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று
உரையாற்றினார்.
சென்னை
11
May
மே 11 - சென்னையில் நியூஸ் 7 தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற நலம்
விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்று மதுரை தோப்பூர் அரசு நுரையீரல்
மருத்துவமனைக்கான சமூக ஆரோக்கியத்திற்கான (community healthcare) விருதை
மருத்துவமனையின் இயக்குநர் அவர்களிடம் வழங்கினார்.
நெய்வேலி
18
May
மே 18 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் முள்ளிவாய்க்கால் தமிழின
அழிப்பின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்
நெய்வேலி அலுவலகத்தில், இன்று(18-05-2019) மாலை நடைபெற்றது.
சென்னை
21
May
மே 21 - தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு தமிழருக்கே! தமிழ்நாட்டின்
வேலைவாய்ப்பை தமிழர்களிடமிருந்து தட்டிப்பறித்து வட இந்தியர்களை
தமிழகத்தில் அனுமதிக்கும் தமிழர் விரோத இந்திய அரசு மற்றும் அதற்குத் துணை
நிற்கும் தமிழக அரசைக் கண்டித்து இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின்(LIC)
பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச்சங்கம் மற்றும் எஸ் சி எஸ் டி,ஊழியர்
நலச்சங்கம் சார்பில் இன்று பகல் 1மணி அளவில் LIC கட்டிடம் எதிரில் நடைபெற்ற
கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்
பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
கள்ளக்குறிச்சி
30
May
மே 30 - நடைபெற்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில், கள்ளக்குறிச்சி தொகுதியில்
வெற்றி பெற்ற திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் திரு,பொன்.கவுதம சிகாமணி.
அவர்கள் இன்று மாலை எனது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
சிதம்பரம்
30
May
மே 30 - நடைபெற்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி
பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர்
திரு,தொல்.திருமாவளவன். அவர்கள் இன்று எனது இல்லத்தில் நேரில் சந்தித்து
நன்றி தெரிவித்தார்.
கடலூர்
23
Jun
ஜூன் 23 - நிலம்,நீர்,காற்று,கடல் வளங்களை அழிக்கும் ஹைட்ரோ கார்பன்
உள்ளிட்ட தமிழ் மக்களை அழிக்கும் பேரழிப்புத் திட்டங்களைக் கைவிடக் கோரி
மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை இன்று கிழக்குக் கடற்கரை சாலையில் நடைபெற்ற
மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டத்தின் ஒரு பகுதியாக கடலூரில் நடைபெற்ற
போராட்டம்.
நாகை
21
Jun
ஜூன் 21 - நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த இணைப்பு விழாவில் ஏராளமானோர் பல்வேறு கட்சிகளிலிருந்து
விலகி எனது தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். இடம் -
நாகை.
சென்னை
21
Jun
ஜூன் 21 - சென்னை காமராஜர் அரங்கத்தில் SDPI கட்சி சார்பில் நடைபெற்ற 11ஆம்
ஆண்டு துவக்க விழா, பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி, மற்றும் விருதுகள்
வழங்கும் விழா,ஆகிய முப்பெரும் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
பத்திரிக்கை
09
Jun
ஜூன் 9 - ராமதாஸ் பேராசையே, பா.ம.க.வின் தோல்வி, நன்றி - கல்கி வார இதழ்,
ஆகிய நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள்.
வள்ளுவர் கோட்டம்
01
Jun
ஜூன் 1 - வள்ளுவர் கோட்டத்தில் அய்யா நல்லகண்ணு அவர்களின் தலைமையில்
நடைபெற்ற சூழலியல் போராளி முகிலன் உயிருடன் இருக்கிறாரா? தமிழக அரசே பதில்
சொல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
சென்னை, வள்ளுவர் கோட்டம்
11
July
ஜூலை 11 - மத்திய அரசின் தொடர் தமிழின விரோதப் போக்கை கண்டித்து இன்று
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
>
சென்னை
11
July
ஜூலை 11 - அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று சென்னை
நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்ற கூடங்குளம் அணுக்கழிவு அபாயம் எச்சரிக்கை
மாநாட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் சார்பில் பங்கேற்று கண்டன
உரையாற்றினார்.
சென்னை
12
July
ஜூலை 12 - ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்துத்துவ வெறியர்களால் படுகொலை
செய்யப்பட்ட "தப்ரோஸ் அன்சாரி"படுகொலையைக் கண்டித்து இன்று தமிழ்நாடு
முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார் .
திருவள்ளூர்
13
July
ஜூலை 13 - திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஏராளமானோர் பல்வேறு
கட்சிகளிலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணையும் நிகழ்ச்சி
இன்று செங்குன்றத்தில் ஏழு தமிழர் விடுதலை மற்றும் நீண்ட நாள் முஸ்லிம்
சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தும் கோரிக்கைப் பொதுக்கூட்டமாக
நடைபெற்றது.
சென்னை
11
Aug
ஆகஸ்ட் 11 - மாவட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை எனது
இல்லத்தில் நடைபெற்றது,கூட்டத்தின் போது தமிழக வாழ்வுரிமைக் கட்சி
நிர்வாகிகளால் ஊக்கமளிக்கப்பட்டு சென்னை அளவிலான குத்துச்சண்டை போட்டியில்
தங்கப்பதக்கம் வென்ற மாணவன் திரு,விஷால். அவர்கள் என்னைச் சந்தித்து
பதக்கத்தையும் சான்றிதழையும் காட்டி வாழ்த்து பெற்றார்.
கூடங்குளம்
13
Aug
ஆகஸ்ட் 13 - மதிமுக ஒருங்கிணைப்பில் அதன் பொதுச் செயலளார்
திரு.வைகோ.அவர்கள் தலைமையில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின்
ஒருங்கிணைப்பாளர் திரு.சுந்தர்ராஜன்.அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புக் கருத்தரங்கம் மற்றும் அணுஉலையின் தீமைகள்
குறித்து விளக்கும் கொரிய மொழித் திரைப்படமான பன்டோரா திரையிடல் ஆகிய
நிகழ்வுகளில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
மயிலாடுதுறை
18
Aug
ஆகஸ்ட் 18 - மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் அதன்
ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் திரு.ஜெயராமன்.அவர்களின் தலைமையில் இன்று
மயிலாடுதுறையில் நடைபெற்ற தமிழ்நாட்டின் இயற்கை வளம் - கனிம வளப்
பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.
திருச்சி
25
Aug
ஆகஸ்ட் 25 - மத்திய அரசின் கருப்புச் சட்டங்களான
முத்தலாக்,NIA,UAPA,மற்றும் 370,35A, சிறப்பு சட்டப்பிரிவுகள் நீக்கம்
மற்றும் கும்பல் படுகொலைகளைக் கண்டித்து இன்று மாலை தமுமுக சார்பில்
திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டண உரையாற்றினார்.
மதுரை
02
Sep
செப்டம்பர் 2 - தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெறக் கோரியும். கல்வியை
மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வலியுறுத்தியும். நேற்று மதுரையில்
புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று
உரையாற்றினார்.
NLC கோரிக்கைப் பேரணி
10
Sep
செப்டம்பர் 10 - NLC ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம்,சம வேலைக்கு
சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கைப் பேரணி
நடைபெற்றது.
நெல்லை
15
Sep
செப்டம்பர் 15 - தமிழகத்தில் வடமாநிலத்தவர் ஆதிக்கத்தைக் கண்டித்தும்,
அரசு, தனியார் வேலை வாய்ப்புகளில் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை உறுதிச்
சட்டம் இயற்ற வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் சார்பில் நேற்று
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சென்னை
17
Sep
செப்டம்பர் 17 - இந்த கல்வியாண்டு முதல் 5ம் வகுப்பு மற்றும் 8ம்
வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற தமிழக அரசின் புதிய
அரசாணையைக் கண்டித்து இன்று (17-09-2019) தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்
சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன போராட்டம் நடைபெற்றது.
கடலூர்
20
Sep
செப்டம்பர் 20 - 20/09/2019 கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் சிப்காட்
வளாகத்தில் உள்ள பாண்டியன் கெமிக்கல்ஸ், மற்றும் பயோனீர் ஜெல்லைஸ்
நிறுவனங்களின் நீண்டகால தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் 20 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எனது
தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
நெய்வேலி
21
Sep
செப்டம்பர் 21 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்
நெய்வேலியில் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
ஜெனிவா
23
Sep
செப்டம்பர் 23 - ஐக்கிய நாடுகள் மன்றத்தின்,மனித உரிமைகள் ஆணையத்தின் இணை
அமர்வில் பங்கேற்று தலைவர் உரையாற்றினார்.
ஜெனிவா
25
Sep
செப்டம்பர் 25 - ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தில்(ஜெனிவாவில்) இன்று நடைபெற்ற
அதன் துணை அமர்வில் பங்கேற்று தலைவர் உரையாற்றினார்.
ஜெனிவா
26
Sep
செப்டம்பர் 26 - ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தில் (ஜெனிவாவில்) இன்று
நடைபெற்ற அமர்வில் பங்கேற்று ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை, மாவீரன்
திலீபன் அவர்களின் உண்ணா விரதம்,அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டியதன்
அவசியம் ஆகியவை குறித்து தலைவர் உரையாற்றினார்.
ஜெனிவா
27
Sep
செப்டம்பர் 27 - மாவீரன் திலீபன் அவர்களின் நினைவு நாளான (26/09/2019)
ஜெனிவாவில் ஈழத் தமிழ் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட மாவீரன் திலீபன்
அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினார்.
சென்னை
07
Oct
அக்டோபர் 7 - சென்னை மண்ணடியில் வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற
சங்பரிவார் தேச உருவாக்கத்திற்கு எதிரான பொதுக்கூட்டத்தில் பங்கேற்று
உரையாற்றினார்.
விழுப்புரம்
17
Oct
அக்டோபர் 17 - விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற உள்ள
இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில்
போட்டியிடும் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் திரு,நா.புகழேந்தி.அவர்களை
ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நேற்று விக்கிரவாண்டியில்
நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
மூலக்காடு
18
Oct
அக்டோபர் 18 - மாவீரன் திரு.வீரப்பன்.அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு நாளான
இன்று அவரது நினைவிடம் அமைந்துள்ள மூலக்காடு கிராமத்திற்கு நேரில் சென்று
மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
குவைத்
08
Nov
நவம்பர் 8 - குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்சார்பில் நடைபெற்ற இரண்டாம்
நாள் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார்.
சென்னை
13
Nov
நவம்பர் 13 - பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் இன்று சென்னை,
சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும்
செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்று செய்தியாளர்களிடையே ஆலோசனைக்
கூட்டத்தின் நோக்கம் குறித்தும் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து
விளக்கினார்.
சென்னை
21
Nov
நவம்பர் 21 - பாபாபர்மசூதி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி
இன்று மாலை பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
நெய்வேலி
27
Nov
நவம்பர் 27 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நெய்வேலி அலுவலகத்தின்
வினோத் அரங்கில் மாவீரர் நாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
பிரான்ஸ்
28
Nov
நவம்பர் 28 - பிரான்ஸ் நாட்டில் மிகுந்த எழுச்சியோடு பெரும் மக்கள் திரளோடு
முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வில் பங்கேற்ற புகைப்படங்கள்.
சென்னை
06
Dec
டிசம்பர் 6 - பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று சென்னை
வள்ளுவர்கோட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் , பாபர்
மசூதியை இடித்த குற்றவாளிகளை விரைந்து தண்டிக்கக் கோரியும்,சிறுபான்மை
சமுதாய மக்களின் வழிபட்டு உரிமையை பாதுகாக்க கோரியும் நடைபெற்ற கண்டன
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
புதுக்கோட்டை
08
Dec
டிசம்பர் 8 - புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில்
மாலை சின்னப்பா பூங்கா அருகில் மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களும்,
திட்டங்களும் என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கண்டண
உரையாற்றினார்.
சென்னை
09
Dec
டிசம்பர் 9 - மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்த சம்வத்தில் பலியான
அப்பாவி தலித் மக்கள் மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடிய நாகை.திருவள்ளுவன்
உள்ளிட்ட தோழர்களை விடுதலை செய்யக்கோரியும், வெண்மணி, கார்க்கி
உள்ளிட்டவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரியும் பெரியாரிய
உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில்
நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா
12
Dec
டிசம்பர் 12 - மாலை இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக
நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சட்ட திருத்த நகலை எரித்து
தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறோம்.
வேலூர்
15
Dec
டிசம்பர் 15 - தமிழக வாழ்வுரிமை கட்சியுடன் தமிழக மக்கள் முஸ்லிம் லீக்
கட்சி இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம்மாலை வேலூரில் எனது தலைமையில்
நடைபெற்றது.
தாம்பரம்
20
Dec
டிசம்பர் 20 -தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து தாம்பரம்
வட்டார உலமா சபை மற்றும் அனைத்து மஹல்லா ஜமாத்துக்கள் சார்பில் மாலை
தாம்பரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன
உரையாற்றினார்.
நெல்லை
29
Dec
டிசம்பர் 29 - நெல்லையில் SDPI கட்சி சார்பில் நடைபெற்ற குடியுரிமை
பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம்
30
Dec
டிசம்பர் 30 - குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள்
பதிவேட்டிற்க்கு எதிராக எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள்
சார்பில் ஒருங்கிணைக்ப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் தொடர் இசை
முழக்கப்போராட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
சென்னை
30
Jan
ஜனவரி 30 - 60 சதவிகிதத்துக்கு மேல் பேருந்து கட்டணத்தை உயர்த்தி,ஏழை எளிய
மக்களின் தலையில் சுமையை ஏற்றிய தமிழக அரசைக் கண்டித்தும் இதனை திரும்ப பெற
வலியுறுத்தியும். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஜனவரி 30 அரசு
போக்குவரத்துக் கழகத்தின் பல்லவன் இல்லம், முற்றுகைப் போராட்டம்
நடைபெற்றது.
சென்னை, வள்ளுவர் கோட்டம்
17
Feb
பிப்ரவரி 17 - காவிரி மீளாய்வு வழக்கின் தீர்ப்பில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட வரலாற்றுத் துரோகம் மற்றும் அநீதியைக் கண்டித்து , 17-02-2018 காலை 11:00 மணி, அளவில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ்வார்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி.திரு.தி.வேல்முருகன்.அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரு,பெ.மணியரசன்.அவர்கள்,தலைவர்,தமிழ்த்தேசிய பேரியக்கம். இயக்குனர். திரு,களஞ்சியம். அவர்கள்,தலைவர்,தமிழர் நலம் பேரியக்கம்.இயக்குனர்,திரு,கவுதமன்.அவர்கள்.ஆகியோரும் தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.
சென்னை, கோயம்பேடு
19
Feb
பிப்ரவரி 19 - கூலி வேலைக்கு சென்ற 5அப்பாவி தமிழர்களை ஆந்திராவில் செம்மரங்களை வெட்ட வந்ததாக பொய்யான குற்றசாட்டை கூறி படுகொலை செய்துள்ள ஆந்திர அரசையும், காவல்துறையையும் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக 19.02.2018 - மாலை 4.00 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆந்திர பேருந்துகளை சிறைப்பிடிக்கும் போராட்டம் நடைபெற்றது, போராட்டத்தின் முடிவில் 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டோம்.
சென்னை
21
Feb
பிப்ரவரி 21 - பயிர் காப்பீட்டை வழங்க மறுக்கும் ICICI Lombard (ஐ சி ஐ சி ஐ லொம்பார்டு) காப்பீட்டு நிறுவனத்தைக் கண்டித்து 2 ம் நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டத்தில் தற்போது தலைவருடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு.திருமாவளவன் அவர்கள்.
சென்னை
22
Feb
பிப்ரவரி 22 - 3 நாட்களாக பகலிலும் இரவிலும் தொடரும் போராட்டம். பயிர் காப்பீட்டை வழங்க மறுக்கும் ICICI Lombard (ஐ சி ஐ சி ஐ லொம்பார்டு) காப்பீட்டு நிறுவனத்தைக் கண்டித்து 2 ம் நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டத்தில் கடந்த 3 நாட்களாக இரவு பகலாக பங்கேற்றுள்ள என்னுடன் தற்போது, SDPI கட்சித் தலைவர் திரு. தெஹலான் பாகவி .அவர்கள் மற்றும் தமிழர் நலம் பேரியக்கம் தலைவர் இயக்குனர் திரு.களஞ்சியம். அவர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை
23
Feb
பிப்ரவரி 23 - தமிழக வாகனங்களைத் தாக்கி கேரளாவுக்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி இனவெறிச்செயலில் ஈடுபட்ட கேரள எம்எல்ஏ கிருஷ்ணகுட்டி மீது கைது நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், கேரளா அரசிற்கு அழுத்தம் தரக்கோரியும், சென்னையில் அமைந்துள்ள கேரள மாநில சுற்றுலா அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள அதிகாரியிடம் தமிழ் அமைப்புகளின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
சென்னை
24
Feb
பிப்ரவரி 24 - நியூஸ் 7 தொலைக்காட்சியின் தங்க தாரகை விருதுகள் வழங்கும் விழாவில் தலைவர்.
சென்னை
26
Feb
பிப்ரவரி 26 - ஆந்திராவில் செம்மரகட்டை கடத்தியதாக 5 தமிழர்களை சுட்டுக் படுகொலை செய்த ஆந்திர அரசை கண்டித்தும், சிறையில் உள்ள 3000 தமிழர்களை விடுதலை செய்யவும், மவுனம் சாதித்து வரும் தமிழக அரசையும் கண்டித்து சென்னையில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.
சென்னை
03
Mar
மார்ச் 3 - நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யும் தமிழக அரசின் முடிவை கைவிடக் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சட்டக் கல்லூரி மாணவர்களை, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில், சந்தித்து தலைவர் ஆதரவு தெரிவித்தார்.
சென்னை, வள்ளுவர் கோட்டம்
06
Mar
மார்ச் 6 - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சிரியா மக்களுக்கு தமிழ்நாட்டின் அஞ்சலி, சுடரேந்தல் – அமைதி வணக்கம், நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர், பண்ருட்டி,திரு,தி.வேல்முருகன்,அவர்கள் கலந்து கொண்டு கண்டண உரையாற்றினார்கள்.
சென்னை, வள்ளுவர் கோட்டம்
10
Mar
மார்ச் 10 - காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக 10.03.2018 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் மண்டல விவசாய வாழ்வுரிமை மாநாடு தஞ்சாவூரில் உள்ள திலகர் திடலில் நடைபெற்றது........
சென்னை
11
Mar
மார்ச் 11 - சென்னையில், பாவலரேறு தமிழ்க்களம் சார்பில் நடைபெற்ற அய்யா பாவலரேறு பெருஞ்சித்தனார், அவர்களின் 85 ம் பிறந்தநாள், மற்றும் திரு பொழிலன்.அவர்களின், வேத வெறி இந்தியா, தமிழ்த் தேச விடுதலைப் போராட்டம், ஆகிய நூல்கள் வெளியீட்டு விழாவில் பங்கேற்று, நூல்களை பெற்றுக்கொண்டு தலைவர் உரை.
பத்திரிகை
16
Mar
மார்ச் 16 - தினத்தந்தி,தினமலர்,தினமணி,தினகரன்,தி ஹிந்து தமிழ், Indian Express ....ஆகிய நாளிதழ்களில்,வெளிவந்துள்ள செய்திகள்.
சென்னை
17
Mar
மார்ச் 17 - இலங்கையில் தமிழ் இசுலாமியர்கள் மீதான சிங்கள இனவெறி தாக்குதலைக் கண்டித்து 17.03.2018 காலை 11.00 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகம் முற்றுகைப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டார்.
பத்திரிகை
22
Mar
மார்ச் 22 - தினத்தந்தி. தினகரன்.தினமலர் ஆகிய நாளிதழ்களில்,வெளிவந்துள்ள செய்திகள்.
23
Mar
மார்ச் 23 - (23-03-2018 ) ஒசூரில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின், கிருஷ்ணகிரி மேற்கு மாவட் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கட்சியின் கொடியேற்றும் நிகழ்வுகள்.
தஞ்சை
27
Mar
மார்ச் 27 - தஞ்சை, அம்மாபேட்டையில், விவசாய சங்கங்கள், மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில், டெல்டா மாவட்டங்களை ஹைட்ரோ கார்பன்,மீத்தேன், போன்ற நாசகார திட்டங்களின் மூலம் பாலைவனமாக்க முயலும்,மத்திய அரசின் ONGC நிறுவனத்தைக் கண்டித்து நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி. சார்பில் கலந்து கொண்டு கண்டண உரை. போராட்டத்தின் முடிவில் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
உளுந்தூர்
01
Apr
ஏப்ரல் 1 - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து 43 சுங்கசவடிகளிலும் சுங்கவரி தர மறுக்கும் போராட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 01.04.2018 காலை 11.00மணி முதல் நடைபெற்றது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உளுந்தூர் பேட்டை சுங்க சாவடியில் எனது தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
உளுந்தூர்
12
Apr
ஏப்ரல் 12 - காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பிரதமர் திரு.மோடி அவர்களின் தமிழக வருகையை எதிர்த்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் இன்று (12-04-2018)சென்னையில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடை பெற்றது. முடிவில் கைது செய்யப்பட்டுள்ளோம்.
சென்னை
14
Apr
ஏப்ரல் 14 - சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 128 வது பிறந்த நாளான கோயம்பேட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது. உடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், திரு.திருமாவளவன் . அவர்கள் மற்றும் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர். டாக்டர், திரு.சேதுராமன். அவர்கள் ஆகியோர் உள்ளனர்.
சென்னை
15
Apr
ஏப்ரல் 15 - 8 வயது சிறுமி ஆஸிபா.8 பேர் கொண்ட காம கொடூரர்களால், பாலியல் வல்லுறவுக்குட்ப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதைக் கண்டித்து த,மு,மு,க, சார்பில் இன்று சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நடத்தப்பட்ட கண்டண ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டண உரை.
சென்னை
18
Apr
ஏப்ரல் 18 - மத்திய அரசே தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஆளுநரை திரும்ப பெறு! தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி,தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்,இன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.கட்சித் தலைவர், திரு.திருமாவளவன் . அவர்கள் மற்றும் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர். டாக்டர், திரு.சேதுராமன். அவர்கள் ஆகியோர் உள்ளனர்.
பத்திரிகை
19
Apr
ஏப்ரல் 19 - தமிழக மக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை இருக்கிறது. - குமுதம் வார இதழ் – நாளிதழ்ளில் வெளிவந்துள்ள செய்திகள்.
சென்னை
04
May
மே 4 - மண்டல NEET தேர்வுக்கானஅலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம். தமிழக மாணவர்கள் நீட் தேர்வை சென்ற ஆண்டை போன்று இந்த ஆண்டும் தமிழகத்திலே எழுதுவதற்கும், மேலும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்க்கு நிரந்தர விலக்கு அளிக்க கோரியும் NEET தேர்வுக்கான மண்டல அலுவலர் அவர்களை இன்று 04.05.2018 பகல் 11.30 மணிக்கு CBSE- NEET அலுவலகத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சந்தித்து மனு அளித்த பின்னர், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
பத்திரிகை
19
May
மே 8 - நீடதினமணி, தினத்தந்தி, தினகரன், தி ஹிந்து தமிழ் நாளிதழ்ளில் வெளிவந்துள்ள செய்திகள்.
சென்னை
31
May
மே 31 - சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன். அவர்கள் மே 31 காலை மருத்துவ மனையிலிருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பத்திரிகை
16
Jun
ஜூன் 16 - நக்கீரன் வார இதழ் - தமிழ் நாளிதழ்ளில் வெளிவந்துள்ள செய்திகள்.
பத்திரிகை
04
Jul
ஜூலை 4 - கலைஞரும்,ஜெயலலிதாவும் அரசியலில் இருந்திருந்தால் வாய் திறப்பாரா கவர்னர்?__ வெடிக்கும் வேல்முருகன்...... நக்கீரன் வார இதழ் - தமிழ் நாளிதழ்ளில் வெளிவந்துள்ள செய்திகள்.
பத்திரிகை
14
Jul
ஜூலை 14 - நிலத்தை பிடுங்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் - வெடிக்கும் வேல்முருகன். நன்றி - ஜூனியர் விகடன் - தமிழ் நாளிதழ்ளில் வெளிவந்துள்ள செய்திகள்.
நெய்வேலி
27
Nov
நவம்பர் 27 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நெய்வேலி கொடிவீரன் வினோத் அரங்கில் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பத்திரிகை
01
Dec
டிசம்பர் 1 - கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண உதவிகள், குறித்து புதிய தலைமுறை வார இதழ்.
சேப்பாக்கம்
07
Dec
டிசம்பர் 7 - வெள்ளியன்று (07-12 2018) எழுவர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் அவர்கள் உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தலைவர் பங்கேற்பு.
நெய்வேலி
24
Dec
டிசம்பர் 24 - நெய்வேலி NLC மூன்றாம் சுரங்க விரிவாக்க பணிக்கு 40க்கும் மேற்பட்ட கிராமங்களின் வாழ்வாதாரமான விளைநிலங்களை கையகப்படுத்தி NLC நிர்வாகத்திற்கு தாரைவார்க்கத் துடிக்கும் மத்திய, மாநில, அரசுகளை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 24.12.2018 அன்று விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை
01
Apr
ஏப்ரல் 1 - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து
முதல்
கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து 43 சுங்கசவடிகளிலும் சுங்கவரி தர
மறுக்கும் போராட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 01.04.2018
காலை
11.00மணி முதல் நடைபெற்றது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்
உள்ள
உளுந்தூர் பேட்டை சுங்க சாவடியில் எனது தலைமையில் போராட்டம்
நடைபெற்றது.
காவிரி
12
Apr
ஏப்ரல் 12 - காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில்
தொடர்ந்து தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பிரதமர்
திரு.மோடி அவர்களின் தமிழக வருகையை எதிர்த்து தமிழர் வாழ்வுரிமை
கூட்டமைப்பு சார்பில் இன்று (12-04-2018)சென்னையில் கருப்புக் கொடி
காட்டும் போராட்டம் நடை பெற்றது. முடிவில் கைது செய்யப்பட்டுள்ளோம்.
சென்னை
14
Apr
ஏப்ரல் 14 - சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 128 வது பிறந்த
நாளான
கோயம்பேட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது. உடன் விடுதலைச்
சிறுத்தைகள் கட்சித் தலைவர், திரு.திருமாவளவன் . அவர்கள் மற்றும்
மூவேந்தர்
முன்னேற்ற கழக தலைவர். டாக்டர், திரு.சேதுராமன். அவர்கள் ஆகியோர்
உள்ளனர்.
சென்னை
15
Apr
ஏப்ரல் 15 - 8 வயது சிறுமி ஆஸிபா.8 பேர் கொண்ட காம கொடூரர்களால்,
பாலியல்
வல்லுறவுக்குட்ப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதைக் கண்டித்து த,மு,மு,க,
சார்பில் இன்று சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நடத்தப்பட்ட கண்டண
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டண உரை.
கிண்டி
18
Apr
ஏப்ரல் 18 - மத்திய அரசே தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஆளுநரை
திரும்ப
பெறு! தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி,தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சார்பில்,இன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.கட்சித்
தலைவர், திரு.திருமாவளவன் . அவர்கள் மற்றும் மூவேந்தர் முன்னேற்ற கழக
தலைவர். டாக்டர், திரு.சேதுராமன். அவர்கள் ஆகியோர் உள்ளனர்.
பத்திரிகை
19
Apr
ஏப்ரல் 19 - தமிழக மக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை இருக்கிறது. -
குமுதம்
வார இதழ் – நாளிதழ்ளில் வெளிவந்துள்ள செய்திகள்.
பத்திரிக்கை
11
Jan
ஜனவரி 11 - தினத்தந்தி, தமிழ், ஹிந்து ஆகிய நாளிதழ்களில் வெளிவந்துள்ள
செய்திகள்.
பத்திரிக்கை
20
Jan
ஜனவரி 20 - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் விழுப்புரம் மாவட்டத்தில்
பத்திரிகையாளர் சந்திப்பில் ஜல்லிக்கட்டு போராட்டங்கள்குறித்து
தெரிவித்த
அறிக்கை தினமணி, தினத்தந்தி ,தினகரன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய
நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள்.
சிதம்பரம்
28
Jan
ஜனவரி 28 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர்
பண்ருட்டி.தி.வேல்முருகன்
அவர்களின் தலைமையில் இன்று சிதம்பரத்தில் வரலாறு காணாத வறட்சியால்
விவசாயிகள் மரணிக்கும் தமிழகத்துக்கு உரிய நிவாரணம் வழங்காத மத்திய
அரசை
க